மிளகு, பாக்கு, கிராம்பு, கறுவா, புளி, சாதிக்காய், இஞ்சி, மஞ்சள் மற்றும் ஏலக்காய் இறக்குமதி & மீள் ஏற்றுமதி தடை.


இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்து
நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் படி, மிளகு, பாக்கு, கிராம்பு, கறுவா, புளி, சாதிக்காய் உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களை இறக்குமதி செய்ய உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் படி நேற்று (05) நள்ளிரவு முதல் மிளகு, பாக்கு, கிராம்பு, கறுவா, புளி, சாதிக்காய், இஞ்சி, மஞ்சள் மற்றும் ஏலக்காய் ஆகிய பயிர்களை மீள் ஏற்றுமதி அல்லது ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கான அனுமதி வழங்கப்பட மாட்டாது நிதி அமைச்சி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறு ஏற்றுமதி பயிர் விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் விவசாய உற்பத்தியாளர்களுக்கு அனுகூலத்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், குறித்த சுற்றறிக்கையின் மூலம் குப்பை பதப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சியுடன் தொடர்புடைய எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மிளகு, பாக்கு, கிராம்பு, கறுவா, புளி, சாதிக்காய், இஞ்சி, மஞ்சள் மற்றும் ஏலக்காய் இறக்குமதி & மீள் ஏற்றுமதி தடை.  மிளகு, பாக்கு, கிராம்பு, கறுவா, புளி, சாதிக்காய், இஞ்சி, மஞ்சள் மற்றும் ஏலக்காய்  இறக்குமதி & மீள் ஏற்றுமதி தடை. Reviewed by Madawala News on December 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.