வெங்காயத்தின் விலை அதிகரிப்பு !! பின்னனி இதுதான்



வெங்காயத்தின் விலை கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
இலங்கையில் மட்டுமன்றி இந்தியா உட்பட வேறு சில நாடுகளிலும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து விட்டது.

வெங்காயத்தின் அதிக விலை காரணமாக பல குடும்பங்களில் அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

உலகிலேயே வெங்காய உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ளது இந்தியா. வெங்காயம் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பருவம் தவறிய மழையாலும், போதிய மழை இல்லாததாலும் அம்மாநிலத்தில் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவே தட்டுப்பாட்டுக்கான பிரதான காரணம் ஆகும்.

அதேநேரத்தில், வெங்காயம் அதிகம் விளையும் பிற மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பீகார் ஆகியவற்றில் பெரிய பாதிப்பு இல்லை. எனினும், முக்கிய உற்பத்தி மையமான மகராஷ்டிராவில் போதிய விளைச்சல் இல்லாததால் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எமது நாட்டில் ஏற்பட்டுள்ள விலையேற்றத்துக்கும் இதுவே காரணம். ஏனெனில் இந்தியாவில் இருந்துதான் பெருமளவு வெங்காயம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

அதிகரிக்கும் வெங்காய நுகர்வு:

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பாக ஓகஸ்ட் தொடங்கி நவம்பர் வரை இந்த வெங்காய விலையேற்றம் தொடர்கதையாகி வருகிறது. ஒக்டோபர், -டிசம்பர் மாதங்களில் இந்தியா பெரிய வெங்காய அறுவடை மேற்கொள்கிற போதும், இம்முறை ஏற்பட்ட கடும் மழை காரணமாக பெரிய வெங்காய உற்பத்தி பாதிப்படைந்தது.

இதனால், பெரிய வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியது. இதனால் இலங்கையின் பெரிய வெங்காய இறக்குமதி தடைப்பட்டது.

இலங்கைக்கு வாராந்தம் 5 ஆயிரம் மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் தேவைப்படுகிறது. உள்ளூரில் மொத்தத் தேவையில் 30 வீதம் வரையே உற்பத்தி செய்யப்படுவதோடு இதனை 40 வீதம் வரை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் எகிப்தில் இருந்து இலங்கை பெரிய வெங்காயம் இறக்குமதி செய்த நிலையில், அந்த நாடுகளிலும் பெரிய வெங்காய கையிருப்பு முடிவடைந்து வருவதாக சர்வதேச சந்தை தகவல்கள் தெரிவித்துள்ளன. நெதர்லாந்தில் இருந்தும் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிற போதும் இதற்குக் கூடுதல் செலவு ஏற்படுகிறது.

உலக சந்தையில் பெரிய வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில் ஜரோப்பிய நாடுகளில் இருந்து மஞ்சள் நிற பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படுகிறது.
வெங்காயத்தின் விலை அதிகரிப்பு !! பின்னனி இதுதான் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு !! பின்னனி இதுதான் Reviewed by Madawala News on December 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.