முஸ்லீம் அரசியல் கோப்ரேட்டுகள்



ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் சிங்களப் பேரினவாதிகளைப் பற்றி நமக்குள்ளே
எழுகின்ற அச்சத்தை விடவும் நமது முஸ்லீம் சோ கோல்ட் அரசியல் அசிங்கங்கள் மேடையில் முழங்குகின்றவதனை பார்க்கையில் இருக்கின்ற அச்சம் டபுளாகி அல்ட்ரா மோட் அச்சம் வருகின்றது.

அமீரலி என்னடாவென்றால் “கலிமாச் சொன்ன எந்த முஸ்லீமும் கோத்தாவுக்கு வாக்களிக்க மாட்டான் என்கின்றார்”…………….

மன்சூர் “கோத்தாவுக்கு வாக்களிக்கின்றவன் முஸ்லீம் சமூக விரோதி” என்கின்றார்.. 

முஸ்லீம் காங்கிரஸ் என்ற இனவாதக் கட்சியின் தலைவர் ஹக்கீம் கோத்தாவுக்கு வாக்களிப்பது முஸ்லீம் சமூக இருப்புக்கு அச்சுறுத்தல்…ஆதலால் சஜீதே நமது சஹாபாத் தோழர்” என்கின்றார். 

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ரிஷாத் பதியூதின் “கோத்தாவுக்கு வாக்களித்தல் இலங்கையில் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இன்னொரு மியன்மாரை உருவாக்கும்” என்று முஸ்லீம்களுக்காக உருகுகின்றார். 

என்னவொரு முனாஃபிக் கூட்டன்டா இது. அரசியலில் தேர்தலின் போது யாரும் யாருக்கும் ஆதரவளிக்கலாம். சஜீத்துக்கு சப்போர்ட்டலாம்…அல்லது கோத்தாவுக்கு வாக்கு கோரலாம். அது அவரவர் அரசியல் உரிமை. தன்னையும் தன் சார்ந்நதவனையும் நல்லவனாகக் காட்டுவதற்கு அடுத்தவனை ராஸ்கல்களாக காட்ட முனைகின்ற மனோநிலை ஒரு வகை உளப்பிறழ்வு. 

மஹிந்தவின் பதினொரு வருட கால ஆட்சியில் அமைச்சுப்பதவிகளும் இதர சொகுசுகளும் அனுபவித்த அதே கூட்டம்தான் அன்று தாஜ்மஹால் காதலியாக இருந்த மஹிந்தவை இன்று படையப்பா நீலாம்பரியாக சமூகத்துக்கு படம் காட்டிக் கொண்டிருக்கின்றது. சஜீத்துக்கு ஆதரவளித்துப் பேசுங்கள்…அவருக்காக வாக்கு கேளுங்கள். ஆனால் சமகால முஸ்லீம்களிடத்தில் வளர்த்து ஆளாக்கப்பட்ட மஹிந்த என்ட் கம்பனி ஃபோபியாவை நுணுக்கமாகப் பயன்படுத்தி ஒட்டு மொத்த முஸ்லீம்களும் மஹிந்த என்ட் கோத்தாவுக்கு ஜென்ம விரோதிகள் போலவும், மஹிந்த என்ட் கோவை ஆதரிக்கின்ற சிங்கள மக்களின் பரம வைரிகள் போலவும் காட்டி மஹிந்தவையும் கோத்தாவையும் சோலே படத்தில் வருகின்ற அஜ்மல்கான்களாக காட்டுவதெல்லாம் அடுக்காதுடா. 

ஆரம்பத்திலிருந்தே மஹிந்த என்ட் கோவை எதிர்த்து அவர்களுக்கெதிராக கோதாவில் நின்றவர்கள் என்றால் கூடப் பரவாயில்லை ஆனால் அந்தாளின் பதினொரு வருட கால ஆட்சியில் அந்தாளுக்கு எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு ஜால்ரா அடித்து கொஞ்சி தடாவி குதூகலித்து அவருக்க கூஜா தூக்கி  அந்தாளின் அன்டர்வெயர் வரை சென்று வந்தவர்கள்தான் இன்று அந்தாளை பொது மேடைகளில் சேர்ஃப் எக்ஸல் போட்டு கழுவிக் கொண்டிருக்கின்றார்கள். 

மஹிந்தவை மா மனிதன் கோ மனிதன் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. அவரிடம் பிரச்சினையிருக்கின்றது. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் மேட்டர் அது கிடையாது. அந்தாளை பொது மேடைகளில் போட்டுக் கழுவுகின்ற யோக்யதை இந்த ஹக்கீமுக்கோ அல்லது ரிஷாதுக்கோ சத்தியமாகக் கிடையாது. நீங்கள் சா “நக்கியர்கள்”. 

ஏஸிஎம்ஸி ஏகலைவர் ரிஷாத் மெக்ஸிமம் லாபம் கண்டது மஹிந்தவின் காலத்தில்தான். அந்தளவுக்கு அந்நதாளுக்கு சலுகைகளும் லக்சரிகளும். ஹக்கீமுக்கும் ஏகப்பட்ட சலுகைகள் பதினொரு வருட காலம் பாட்ஷா ரஜனியாக இருந்த மனுஷன் எப்படிய்பபா இந்த பொரட்டிகளுக்கு ஓவர் நைட்டில் ஆன்டனி ரகுவரனாக மாறிப் போனார். 

வழமை போலவே சனங்களை வைத்து இவ்வாறு பொது மேடைகளில் மஹிந்தவையும் கோட்டாவையும் கழுவி ஊற்றுகின்ற நமது மகாத்மாக்கள் தமது சொந்த அரசியல் அஜென்டாவை அரங்கேற்றிக் கொண்டிடிருக்கின்றார்கள். 

சமூகத்தை உசுப்பேற்றி அதனை ரணகளப்படுத்தி தமது கதிரைகளையும் பதவிகளையும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். மஹிந்த ஃபோபியா கோத்தா ஃபோபியா போன்றவற்றை முஸ்லீம் சமூகத்தில்’ ஆழ வேரூண்ட வைப்பதனுடாக தமது சொந்த லாபங்களை அறுவடை செய்து கொண்டிருக்கின்றன இந்த அரசியல் அசிங்கங்கள். 

முஸ்லீம்களுக்கெதிராக எழுந்துள்ள இனத்துவேசத்தை வளரத்த மஹிந்த கோத்தா என்று சொல்லிச் சொல்லி அதனை முஸ்லீம் சமூகத்தில் ஆழ விதைத்துக் கொண்டிருக்கின்றனர். சத்தியமாக இதில் சமூக அக்கறை என்ற சமாச்சாரமெல்லாம் கிடையாது. மாற்றமாக சொந்த நலன்களும்’ தனி நபர் லாபங்களுமே குவிந்து கிடக்கின்றன. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பின் பின்னால் ஹக்கீம் என்ற மகா நடிகன் கட்சி தாவி மைத்திரி பக்கம் முழந்தாழிட்டு மண்டியிட்டது. 

போதும் வாப்பா இந்த முஸ்லீம் சமூகத்த வித்துப் பொழச்சது என்ட அரசியல் கோப்ரேட் களவானிகளே  

கிண்ணியா சபருள்ளாஹ் 
2019-11-12
முஸ்லீம் அரசியல் கோப்ரேட்டுகள் முஸ்லீம் அரசியல் கோப்ரேட்டுகள் Reviewed by Madawala News on November 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.