எல்பிடிய பிரதேச சபை தேர்தலில் மொட்டு அமோக வெற்றி

இன்று நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. 

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. 

எல்பிட்டிய பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்...! 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 23,372 வாக்குகள் - 17 உறுப்பினர்கள் தெரிவு ஐக்கிய தேசிய கட்சி - 10,113 வாக்குகள் - 7 உறுப்பினர்கள் தெரிவு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 5,273 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் தெரிவு மக்கள் விடுதலை முன்னணி - 2,435 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் தெரிவு ஜனநாயக தேசிய ஐக்கிய முன்னணி - 310 வாக்குகள் - உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவில்லை 

2018 ஜனவரி 30 ஆம் திகதி உயர் நீதிமன்றம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து 2018 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
எல்பிடிய பிரதேச சபை தேர்தலில் மொட்டு அமோக வெற்றி எல்பிடிய பிரதேச சபை தேர்தலில் மொட்டு அமோக வெற்றி Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.