இந்த நல்லாட்சியின் சீர்கெட்ட நிர்வாகத்தினால் இன்று முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரை பெற்றுள்ளோம்.


மாத்தறை மாவட்ட முஸ்லிம்களை 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா கட்சி
முஸ்லிம்களுடனான சந்திப்பை ஏற்பாடு செய்தனர். கவுள்ளார். இச் சந்திப்பானது கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெலிகம நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனா முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா, உட்பட மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஏனைய பொதுஜன பெறமுனையை பிரதிநிதிப்படுத்தி மாத்தறை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் முஸ்லிம்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி மற்றும் ராசிக் சரூக், பிரதேச சபைகளை பிரதிநிதிப்படுத்தி அரசியல் வாதிகளான வெலிகம நகரசபை முன்னால் தலைவர் மொஹமட் ஹுஸைன் ஹாஜியார் முஹம்மத், பேருவளை நகரசபை முன்னால் தலைவர் மில்பர் கபூர்,தம்புள்ள நகரசபை முன்னால் தலைவர் ஹில்மி கரீம், அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் சமீம் இக்பால் மற்றும் ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் பாரிஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி  தனதுரையில்,
பல்லாயிரம் ஆண்டுகளாக முஸ்லிம்கள் பௌத்த, இந்து, கிறிஸ்தவ சமுகத்துடன் ஒன்றாக வாழ்கின்றனர். ஆனால் இங்கு நாட்டின் பகுதிகளை கேட்டு போராடவில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக நல்லாட்சியின் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்ட இச்சந்தர்பத்தில் யார் யுத்தங்களை ஊக்குவிக்கின்றனர் என்பதை சிந்திக்க வேண்டும்.
1980 தேர்தலை புறக்கணித்து, யாழ்ப்பாண நூல் நிலையத்திற்கு தீ வைத்து, 1983 கறுப்பு ஜூலை உருவாக்கி இனவாதத்தை பரப்பி நாட்டில் தமிழீழ போராட்டத்தை உருவாக்க வித்திட்டது ஐக்கிய தேசிய அரசாகும். இதனால் 30 ஆண்டுகளாக கஷ்டப்பட்டோம்.
இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ் சமூகம், அடுத்ததாக முஸ்லிம், சிங்கள சமூகம். இதனால் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தது. முஸ்லிம்களுக்கு விரட்டி விரட்டி அடிக்கப்பட்டது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தின் பாதுகாவலராக ஐக்கிய தேசிய கட்சி பார்க்கப்படுகிறது.
முஸ்லிம்கள் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் செல்கின்றனர். ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் அவர்கள் நாட்டில் இனக்கலவரங்களை உருவாக்கி நாட்டின் சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவத்தை சீர் குழைத்தனர். ஆனால் இந்தப் போராட்டத்தை தோற்கடித்து வடக்கில் ஓர் இலட்சம் ஹெக்டேர்கும் மேற்பட்ட காணிகளை இழந்த முஸ்லிம்களை மீள் குடியமர்த்தி சுமார் 200 பள்ளிவாசல்கள், பாடசாலைகளை அமைத்தது மஹிந்த ராஜபக்ஷா அரசின் 2ம் காலப்பகுதியிலாகும்.
ஆனால் ஓர் இனக்கலவரம் ஏற்பட்டது அலுத்கமையில் ஏற்பட்டது. அதனை எம்மால் தடுத்திருக்கலாம். ஆனால் சதித்திட்டம் நடந்தது இதனால் எம்மால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது தெரிந்து கொள்ளும் போது தாமதமாகிவிட்டோம்.
ஆனால் இந்த நல்லாட்சியின் சீர்கெட்ட நிர்வாகத்தினால் இன்று முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரை பெற்றுள்ளோம். ஆனால் அவர்களுடன் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சி பற்றியும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அமைச்சரவை பற்றியும்தான் பேசுகின்றனர்.
இறுதியாக ஓர் விடயம் நான் ஷமல் ராஜபக்ஷா, மஹிந்த ராஜபக்ஷா, கோத்தாபய ராஜபக்ஷா, பசில் ராஜபக்ஷா மற்றும் நாமல் ராஜபக்ஷா ஆகியோர்களுடன் நெருக்கமாக பழகியுள்ளேன். அவர்களின் வழக்குகளுக்கும் ஆஜராகியுள்ளேன். நான் உச்ச நம்பிக்கையுடன் ஓர் விடயம் கூறுகிறேன். இவர்கள் யாரிடமும் இனவாதமில்லை. அவ்வாறு இனவாதம் இருந்தால் நான் இவர்களின் வழக்குகளுக்கு ஆஜராக மாட்டேன்.

இந்த நல்லாட்சியின் சீர்கெட்ட நிர்வாகத்தினால் இன்று முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரை பெற்றுள்ளோம். இந்த நல்லாட்சியின் சீர்கெட்ட நிர்வாகத்தினால் இன்று முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரை பெற்றுள்ளோம். Reviewed by Madawala News on October 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.