பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை நாளை பாராளுமன்றிற்கு



உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்றதைப் போன்ற தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் 

இடம்பெறாதிருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக் கைகள் மற்றும் அவை தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படவுள்ளதாக, 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத

தாக்குதல்கள் பற்றி ஆராய்வதெற்கு நியமிக்கப்பட்ட விசேடபாராளுமன்றக் குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.


சுமார் 200 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையை தயாரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்திருப்பதாகவும் அவர்

குறிப்பிட்டார்.


இதேவேளை, இந்த அறிக்கையின் ஊடாக அரசியல்வாதிகள் சிலருக்கும், அதி காரிகள் சிலருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்

பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் ஊடக செய்திகள் எந்தவித உண்மையும் இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த அறிக்கை தொடர்பில் வெளியான சில தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்த அவர்


எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக இந்த விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவில்லையென்றார்.


"இந்தத் தாக்குதல்களுக்கு யார் பொறுப்புக் கூற

வேண்டும் என்பதை பாராளுமன்றத்தினால் பரிந்துரைக்க முடியாது. நீதிமன்றத்துக்கே

இதற்கான அதிகாரம் உள்ளது.


எங்கு குறைபாடுகள் இடம்பெற்றுள்ளன, எவ்விடத்தில் பலவீனம் காணப்படுகின்றது

என்பதையே பாராளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்தது. கிழக்கு மாகாணத்தில் இதற்

கான சூழல் உருவாகியது எவ்வாறு, இது மேலிடத்துக்கு அறிக்கையிடப்படாதது ஏன்

பாதுகாப்புத் தரப்புக்களுக்கிடையில் தொடர்பாடல்கள் இடம்பெறாமை, புலனாய்வு சேவைகளினால் கிடைக்கப்பெற்ற தகவல்கள் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்படாமை போன்ற விடயங்களே விசேட பாராளுமன்றம் குழுவினால் ஆராயப்பட்டுள்ளது.


இதனூடாக கண்டறியப்பட்ட குறைபாடுகள் மாத்திரமன்றி, எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு

தாக்குதல் போன்ற தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதைத்தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்பற்றிய பரிந்துரைகளே

இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள"என்றும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி மேலும்

தெரிவித்தார்.


பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை நாளை பாராளுமன்றிற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை நாளை பாராளுமன்றிற்கு Reviewed by Madawala News on October 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.