எல்பிடிய தேர்தல் முடிவுகளின் எதிரொலி ! 3 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவுடன் பேச்சு ..எல்பிடிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அதன் எதிரொலியாக 3
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவர்  மஹிந்தவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நம்பகமாக அறியவருகிறது.

இதுவரை காலமும் இல்லாத அளவு எல்பிடிய பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கட்சி பின்னடைவை சந்தித்துள்ள அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியினால்  30 % வாக்குகளை கூட பெற முடியாமல் போன இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மஹிந்த தரப்பின் பக்கம் தாவலுக்கு தயாராக இருந்த 3 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் நேற்று எல்பிடிய  பெறுபேறுகளை அடுத்து பொதுஜன பெரமுனவில் இணைவது பற்றி பேசியுள்ளனர்.

எப்போது இணையவேண்டும் என தான் கூறும் வரை அப்படியே இருக்குமாறு மஹிந்த தரப்பு குறித்த உறுப்பினர்களை கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது.
எல்பிடிய தேர்தல் முடிவுகளின் எதிரொலி ! 3 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவுடன் பேச்சு .. எல்பிடிய தேர்தல் முடிவுகளின் எதிரொலி ! 3 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவுடன் பேச்சு .. Reviewed by Madawala News on October 12, 2019 Rating: 5