ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியுமானால் களமிறங்குவேன், அவ்வாறு இல்லாவிடின் வெளியேறி செல்வேன்.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியுமானால் களமிறங்குவதாகவும் அவ்வாறு
இல்லாவிடின் வெளியேறி செல்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (12) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற வகையில் கட்சியின் தலைமைத்துவத்தில் உருவாகும் கூட்டமைப்பை வெற்றிபெற செய்வது தனது கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால் வெளியேறி செல்வதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

70 வருடமான அரசியல் துறையில் இருந்த தனக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கஷ்டமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கட்சியை பாதுகாத்த தலைவராக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியுமானால் களமிறங்குவதாகவும் அவ்வாறு இல்லாவிடின் வெளியேறி செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியுமானால் களமிறங்குவேன், அவ்வாறு இல்லாவிடின் வெளியேறி செல்வேன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியுமானால் களமிறங்குவேன்,  அவ்வாறு இல்லாவிடின் வெளியேறி செல்வேன். Reviewed by Madawala News on September 13, 2019 Rating: 5