வாகனம் = வா + கவனம்


அது ஒரு போதை முருக்க முருக்க ஓடும்
ஓடும் போது காற்றும் பதறும். என்னவாகே போகின்றதோ
இவனுக்கும் இவன் குடும்பத்திற்கு என்று.
சம்பவம் நடந்து முடிந்தவுடன் முழு ஊறே கதறும் வைத்தியசாலையில்.

ஆம் அதனை அனைவரும் "விபத்து" என்கிறார்கள் ஆனால் அதற்கு வாய்ப்பில்லை!!!

வைத்தியசாலையில்
நிற்கும் பைக்கை முருக்கும் இளைஞர்களின் வலது கை உரோமங்களோ சற்று அதிகமாக சிலிர்க்கும்.

உண்மையில் ஓடும் போதோ வாகனம் அறிவித்தளை தந்துவிடும் இது உனது உடல் வீதியை பதம்பார்க்கும் "வேகம்" என்று ஆனால் மனம் ஏனோ உடலை கூறி அள்ளினாலும் பரவாயில்லை என்று சங்கு ஊதும் சைத்தான் உருவத்தில்...

பெற்ற தாயின் மனமோ அழத்தெரியாமல் அழுது ஸ்தம்பித்துவிட்டு சொல்லும்
"மகனின் இந்த வாகன ஆசையை மட்டும் நிறைவேற்றாமலே இருந்திருக்கலாம் நான்" என்று

ஒரு சில உடல்கள் செத்து பிழைக்கும் இன்னும் ஒரு சில உயிர்கள ் செத்தே கிடக்கும் எது எவ்வாறே நீங்கள்

அதிவேகமாக சென்று சேமித்துக்கொண்ட நேரத்தை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்...

AG.waseem
Pottuvil
வாகனம் = வா + கவனம் வாகனம் = வா + கவனம் Reviewed by Madawala News on September 13, 2019 Rating: 5