உயர்தரப் பரீட்சையும் நீண்ட கொத்பா பிரசங்கமும்.

வெள்ளிக்கிழமை நீண்ட கொத்பா உரை காரணமாக க.பொ.த.(உயர்தரப்) பரீட்சைக்குத் 
தோற்றும் முஸ்லிம் பரீட்சர்த்திகள் பலர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்;கப்படுகிறது...


கடந்த வெள்ளிக்கிழமை சில பள்ளிகளில் பி.ப.1.20 மற்றும் 1.25 வரை கொத்பா பிரசங்கங்கள் நீண்டதன் காரணமாக சில பரீட்சர்த்திகளும் பரீட்சை மண்டப முஸ்லிம் அதிகாரிகளும் நேரத்திற்கு பரீட்சை மண்டபங்களுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.


 எனவே தற்போது பரீட்சை நடைபெறுகின்ற காலமாதலால் இன்னும் ஒரு மாத காலத்திற்காவது பரீட்சாத்திகளதும், பரீட்சை மண்டப முஸ்லிம் அதிகாரிகளதும் வசதி கருதி குத்பா பிரசங்கங்களை சுருக்கிக் கொள் நடவடிக்கை எடுப்பார்களாயின் அது வசதியாக இருக்கும் எனத் தெரிவித்தனர். 


இதற்கு முன்னைய காலங்களில் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கடந்த வாரம் ஏதோ ஒரு காரணத்தால் அது தவறவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். 


எனவே பள்ளி நிர்வாகங்களும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் இதுவிடயமாக முஸ்லிம் பரீட்சாத்திகளது வசதி கருதி கொத்பா பிரசங்கங்களை சுருகிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.   
– ஜே.எம். ஹபீஸ் –
உயர்தரப் பரீட்சையும் நீண்ட கொத்பா பிரசங்கமும். உயர்தரப் பரீட்சையும் நீண்ட கொத்பா பிரசங்கமும். Reviewed by Madawala News on August 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.