நானும் சஜித்துக்கு எதிராக கறுவா தடியினை கையில் எடுத்தவன்.. ஆனால் சஜித் திருடன் கிடையாது.


-ஓட்டமாவடி அஹ்மத் இர்ஷாத் -
2020-2025 எமது நாட்டினுடைய அமைச்சரைவின் தலைவராக இளம்
அரசியல்வாதியான சஜித் பிரேமதாச செயற்படுவார். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சஜித்துடன் எனக்கும் பிரச்சனை இருந்தது. ஆறு வருடங்களுக்கு முன்னர் நானும் அவருக்கு எதிராக கறுவா தடியினை கையில் எடுத்தேன்.

சஜித்திடம் ஒரு விடையத்தினை காண்கின்றேன். சஜித் பிரேமதாசவிற்கு திறை சேறியில் இருந்து நிதி ஒதுக்கும் பொழுது எதுவித அச்சங்களும் இன்றி ஒதுக்க முடியும். ஒரு புறம் அவர் திருட மாட்டார்.
அத்துடன் பணத்தினை செயற்திறனாக செலவு செய்வார். ராஜபக்ஸ குடும்பத்துக்கு இந்த நாட்டின் ஆட்சி செல்வதனை தடுக்க கூடிய ஒரே தலைவர் சஜித் என்பதனை விஷேடமாக நிதி அமைச்சர் என்ற வகையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று சஜித் பிரேமதாசவினை ஆதரித்து இடம் பெற்ற மாத்தறை பொதுக்கூட்டத்தில் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் குறித்த பொதுக்கூட்டத்தில்….நண்பர்களே அச்சம் அடைய வேண்டாம். ஐக்கிய தேசிய கட்சி என்ற வகையில் இன்று நாம் எல்லோரும் ஒன்றிணைந்துள்ளோம். அடுத்த வாரத்துக்குள் எமது கட்சியில் இருக்கும் கருத்து முரண்பட்டினை கொண்டவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து கெளரவ தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரேரிக்க கரு ஜயசூரிய அதனை உறுதிப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்படுவார்.

அது மாதிரமல்லாமல் ரவூப் ஹக்கீம், றிசாட் பதுர்டீன், சம்பந்தன், மனோகனேசன், திகாம்பரம், ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோர்களின் ஆதரவுடன் சந்திரிக்கா குமாரதுங்கவின் சாதனையினையும் முறியடித்து 65 விகித மக்களின் வாக்குகளை பெற்று ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ஒருவர் 25 வருடங்களின் பின்னர் தெரிவாகுவார்.

இங்கு உரையாறிய அமைச்சர் ஹரீன் பெயர்னாண்டோ… சிலர் தங்களது கனவுகளின் படி அஜித் பி பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க போன்றோருக்கு எதிராக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புலம்பி திரிகின்றனர். ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க விரும்பினால் அதனை செய்யுங்கள். நாங்கள் அதற்கு அச்சம் அடைய போவதில்லை. நான் அன்று கூறியதை போன்று அலைக்கு பயம் என்றால் கடலுக்கு போவதில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியாக சஜித்தினை ஆக்கியே தீருவோம் என உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அந்த உறுதி பொழியினை இன்று நான் மாத்தறையில் இருந்து கூறுகின்றேன்.

மறு பக்கத்திலே அங்கே உரையாற்றி புத்திக்க பத்திரண… 2010ல் இருந்து இதைத்தான் நாங்கள் கூறிவருகின்றோம். எங்களுடைய கட்சி உறுப்புறிமையினை ரத்து செய்யும் பொழுது கூறினோம். அமைச்சு பதவிகளை வழங்காது மூன்று வருடங்கள் இலுத்தடிக்கும் பொழுது கூறினோம். சஜித் இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்கு பயணம் இல்லை என்று உறுதியாக கூறினேன். அன்று எங்களை மொடக்கும் பொழுதும், நசுக்கும் பொழுதும், இறப்பர் பந்து போன்று மேழே சென்று கீழே வரும் நிலையில் நாங்கள் நடாத்தப்பட்ட பொழுது என்ன கூறினோம்.? சஜித்துடன் இணைந்து வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றே கூறினோம்.

முடியுமானால் மாத்தறை மாவட்டத்தில் உள்ள மூன்று உறுப்பினர்களை ஒரே மேடைக்கு கொண்டுவருமாறு அன்று மாத்தறையில் உள்ள தாமறை மொட்டு உறுப்பினர்கள் சவால் விடுத்தனர். ஆனால் ஜானதிபதி தேர்தலில் வெற்றி பெற்று பொதுத்தேர்தல் மேடையில் இன்று இருக்கும் மூவர் அல்ல மாத்தறை மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் ஐவரையும் ஒரே மேடையில் உட்கார வைத்து உங்களுக்கான பதிலினை வழங்கவுள்ளோம்.
Minister Mangala Samaraweera says… 2020-2025 Young politician Sajith Premadasa will be the head of our country's cabinet and It should be accepted by all. I had a problem with Sajith. Six years ago, I took a cinnamon stick against him. But Sajith has no thief.

I see one issue with Sajith, When Sajith Premadasa is allocated funds from the Treasury without any fears. I give him a certificate of confidence that he will never steal. As well as spending money efficiently. I would like to specifically state that the only leader who can prevent the Rajapaksa family from ruling this country, stated this Minister of Finance Mangala Samaraweera at the public meeting in Matara today (23.08.2019) supporting Sajith Premadasa.

Also at the meeting…… Guys, don't be afraid. As the United National Party we are all united today. Ranil Wickremesinghe proposes Sajith Premadhasa as the presidential candidate and will be announced with all together within the next week.

Not only that…, Sajith will be brake the record of Chanthika Kumaratunga and the president of the United National Party will be elected after 25 years, with 65% of the popular vote With the support of Rauf Hakeem, Rizard Badurdeen, Sampanthan, Manoganesan, Digambaram, Rajitha Senaratne and Champika Ranawaka.

Addressing the Minister Hareen fernando said, “Some people are lamenting that the party should take disciplinary action against to Ajith P. Perera and Sujeewa Senasinghe. If you want to take disciplinary action, do it. We're not going to fear that. If I am afraid of the tide, like I said, I will not go to sea. I would like to assert that we will make Sajith the President of this country.

On the other side Budikka Pathirana addressing….This is what we have been saying since 2010. They canceled our party membership. Also we said during the three years of not giving ministry positions period. If Sajith was absent then I would say that the UNP would not be traveling.

The opposition party in Matara challenged the three members of the Matara district to take the same platform if possible. But we will win the Presidential election and give you a response to the Matara District and not only the three member, but also five member of Matara District take the same General election platform.
நானும் சஜித்துக்கு எதிராக கறுவா தடியினை கையில் எடுத்தவன்.. ஆனால் சஜித் திருடன் கிடையாது. நானும் சஜித்துக்கு எதிராக கறுவா தடியினை கையில் எடுத்தவன்.. ஆனால் சஜித் திருடன் கிடையாது. Reviewed by Madawala News on August 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.