60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதல்ல, ஓய்வு பெறும் காலம் நீண்டதாக இருக்க வேண்டும்´



உழைக்கும் மக்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானது
என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

தேசிய தொழில் பாதுகாப்பு துறைக்கான விருது வழங்கும் விழா பிரதமர் தலைமையில் நெலம் பொகுன மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நேற்று நடைபெற்றது. 

தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ´உற்பத்தி பாதுகாப்பு மற்றும் ஏனைய துறைகளில் தொழில் பாதுகாப்பு என்பது சர்வதேச தரத்தை எட்டியுள்ளது. 

தொழில் பாதுகாப்பு என்பது உழைக்கும் மக்களுக்கு ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகின்றது. எனவே, இது எமது தொழிலாளர் கொள்கைகளில் ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகின்றது. அதற்கமைய ஒவ்வொரு தொழிலாளியும் அதன் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். 

இதனை பிற வியாபாரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். உழைக்கும் மக்களுக்கு தேவையான தொழில்சார் பாதுகாப்பை அமுல்படுத்தியதற்காக நாட்டின் தொழில்முனைவோருக்கு நன்றி செலுத்த வேண்டும். 

நாட்டில் மக்கள் தொகை விரிவடையவில்லை ஆனாலும் வேலையற்றோரை நாம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனூடாக எதிர்வரும் நாட்களில் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதல்ல, ஓய்வு பெறும் காலம் நீண்டதாக இருக்க வேண்டும்´ என்றார்.
60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதல்ல, ஓய்வு பெறும் காலம் நீண்டதாக இருக்க வேண்டும்´ 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதல்ல, ஓய்வு பெறும் காலம் நீண்டதாக இருக்க வேண்டும்´ Reviewed by Madawala News on August 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.