2019 ம் ஆண்டு, GCSE பரீட்சையில், இங்கிலாந்து, லெஸ்டர் வாழ் இலங்கை முஸ்லீம் மாணவ மாணவிகள் சாதனை.


2019 ம் ஆண்டு, GCSE  பரீட்சையில், இங்கிலாந்து,  லெஸ்டர் வாழ் இலங்கை 
முஸ்லீம் மாணவ மாணவிகள் சாதனை:

கடந்த வியாழக் கிழமை (22/08/2019) இங்கிலாந்தில் வெளியான GCSE பெறுபேறுகளின் படி இங்கிலாந்தின் லெஸ்டர் மாநகரில் இருபதுக்கும் மேட்பட்ட (20) இலங்கை  மாணவ  மாணவிகள் சிறந்த பெறுபேறுகள் பெற்று, சாதனைகள் புரிந்துள்ளதோடு  அதே தினம், தாம் விரும்பிய உயர் தரப் பிரிவில்  தங்களை  பதிவும் செய்து கொண்டனர்.
 
இவர்களில், ஸாரா  முகம்மது எஹிசான்  சிரேஷ்ட பெறுபேறுகளோடு சித்தி யடைந்துள்ளார். இவர் மடவள பஸார் பங்களா கெதர பகுதியைச்  சேர்ந்தவரும், மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவருமான(1991) அலி ரஷாத் முஹம்மது எஹிசான், மற்றும்  மாத்தளை, கழுதாவௌ யைச் சேர்ந்த வரும்,  கண்டி புனித அந்தோனியார்  மகளிர் கல்லூரியின் பழைய   மாணவியுமான நஷ்பா அப்துல் கரீம் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியுமாகும்.
 ஸாரா  முகம்மது எஹிசான்   தான் தோற்றிய பத்து  பாடங்களிலும் சிரேஷ்ட பெறுபேறாக ,8 A*A* , 1A *, 1A  என பெற்று Leicester  High School for Girls கல்லூரியில் Science பிரிவில்  இணைந்து கொண்டார்.
 
மாத்தளை ஸாஹிரா தேசிய பாடசாலை யின் ஓய்வு பெற்ற  அதிபர் அப்துல் கரீம் மற்றும்  மாத்தளை ஆமினா மகளிர் தேசிய பாடசாலையின் ஓய்வு பபெற்ற  அதிபர் சம்சுன் நிசா ஆகியோரின்  பேத்தி  என்பது குறிப் பிடத் தக்கது.
*பெறுபேறு இணைக்க கப் பட்டுள்ளது.
 
மேலும் அனீகா உஸ்மான் அவர்களும் சிரேஷ்ட பெறுபேறுகளோடு சித்தி யடைந்துள்ளார். இவர் தான் தோற்றிய ஒன்பது   பாடங்களிலும் சிரேஷ்ட பெறுபேறாக ,2 A*A* , 2A *, 5A  என்ற பெறு பேறு கள் பெற்று Birmingham , Handsworth, 4th Edward Grammar School for Girls கல் லூ ரியில் கலைப்  பிரிவில் சட்டப் படிப்பைத் தொட ரு ம் நோக்கில்  இணைந்து கொண்டுள்ளார் .
 
இவர் மடவள பஸார் பள்ளி வாசல் வீதியைச் சேர்ந்தவரும் , மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவருமான(1983) உஸ்மான் அப்துல் சமது Llb (SL ) , மற்றும்  மாவனல்லையைச் சேர்ந்த வரும்,  கேகாலை St . Josephs Convent   மகளிர் கல்லூரியின் பழைய   மாணவியுமான பாத்திமா ரிசானா உஸ்மான் Llb (SL ) ஆகியோரின் புதல்வியுமாகும்.  
 
 
மேலும் உமாரா  முஹமது நவாஸ்  அவர்களும் சிரேஷ்ட பெறுபேறுகளோடு சித்தி யடைந்துள்ளார். இவர் தான் தோற்றிய ஒன்பது    பாடங்களிலும் சிரேஷ்ட பெறுபேறாக 9A *,   என்ற பெறு பேறு கள் பெற்று Leicester  , Jamia Girls Academy யில் இணைந்து கொண் டுள் ளார் .
 
இவர் மன்னார் வெடலைத் தீவைச்    சேர்ந்தவரும் , அலிகார் மகாவித்தி யாலய பழைய மாணவருமான, முஹமது நவாஸ்   , மற்றும்  யாழ்பா னத்தைச்  சேர்ந்த வரும்,  பதுரிய  மத்திய கல்லூரியின் பழைய   மாணவியுமான    பின்த்  ஷாஹுல் ஹமீது  ஆகியோரின் புதல்வியுமாகும்.  
 
 
மேலும் ஷாஹீன் ரிஸ்வி   அவர்களும் சிரேஷ்ட பெறுபேறுகளோடு சித்தி யடைந்துள்ளார். இவர் தான் தோற்றிய பத்து   பாடங்களிலும் சிரேஷ்ட
 பெறுபேறாக 4 A*A* , 1A *, 5A  என்ற பெறு பேறு கள் பெற்று Leicester  , Beauchamp  கல்லூ ரியில்  கணிதப்   பிரிவில்   இணைந்து கொண்டுள் ளார்
 
மேலும் ஆகிப் முஹமது மஸூ மி    அவர்களும் சிரேஷ்ட பெறுபேறுகளோடு சித்தி யடைந்துள்ளார். இவர் தான் தோற்றிய ஒன்பது    பாடங்களிலும் சிரேஷ்ட
 பெறுபேறாக  1A *, 4A, 4B   என்ற பெறு பேறு கள் பெற்று  Loughborough Grammar   கல் லூ ரியில்   இணைந்து கொண்டுள் ளார்
 
தானும் தனது தந்தையும் மே மாதம் 2019  கார் விபத்துக்கு ஆளாகிய  பின்பு 4 பாடங்களில் பரீட்சை எழுதியமை குறிப்பிட  தக்கது. 
இவர் அக்குரனை யைச்   சேர்ந்தவரும் , ,அஸ்ஹர் தேசிய  பாடசாலையின் பழைய மாணவர் (1996) முஹம்மது மஸூ மி    (1996)  , அவர்களின் சிரேஷ்ட புதல்வராக்கும் 
 
மேலும் யூஸுப் அனீஸ்  அவர்களும் உயர் தரத்துக்கு  சித்தி யடைந்துள்ளார்.இவர் தான் தோற்றிய ஒன்பது   பாடங்களிலும் பெறுபேறாக , 2A *, 3A ,2 B , 2C  என்ற பெறு பேறு கள் பெற்று Beauchamp College இணைந்து கொண்டுள் ளார்
இவரின் பெற்றோர்கள் அக்குரனையைச்   சேர்ந்தவர்களாகும். அதே போல் இருவரும் அஸ்ஹர் தேசிய  பாடசாலையின் பழைய மாணவர் களாகும்.
 
 ஆகிப்,யூசுப் ஆகிய இருவரும் பகுதி நேர மாணவர்களாக அமர்ந்து கணிசமான அளவு அல்குர்ஆனை மனனம் செய்துள்ளமையும் குறிப்பிட தக்கது.
 
இங்கே சில மாணவ மாணவிகளின்  பெரு பேறுகள்  மாத்திரமே வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமானது. இன்னும் பலரின் பெரு பேறுகள் இங்கே பதிய முடியாமல் போனமைக்கு வருந்துகிறோம். குறித்த நேரத்தில் தகவல்களை பெற முடியாமல் போனமை யே இதட்கான காரணமாகும்.

மாணவ மாணவிகளின் பெயர்கள் கற்ற பாடசாலைகள், உயர் தரம் கட்க போகின்ற பாடசாலைகள் பெற்றோரின் பிறந்த ஊர் கற்றடசாலைகளின் பெயர்கள் என பலதகவல்களை இங்கே ஊக்குவிப்புக்காக  மாத்திரமே பதி கின்றோம்.

 வளர்ந்து வரும் இளம் சமூகத்துக்கு மிக சிறந்த வழிகாட்டிகளா கவும் முழு மனித சமூகத்துக்கும் நிகரிலா சேவை புரியக் புரியாக் கூடிய வர்களாகவும்  எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களை ப்  பொருந்திக் கொள்வதோடு, இவர்களுடைய  கல்விப் பயணத்தை இலகு படுத்தி வைப்பத்தோடு, மன வலிமையையும், பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களுக்கு  அருள்வானாக என்று, நாம் அனைவரும் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப் போமாக.



மேலதிக தகவல் 


 *இங்கிலாந்தின் கல்வி முறையின் பிரகாரம், இவர்களில் பெரும் பான வர்கள் தாம் விரும்பிய உயர் தர பாடசாலைக்கும் தாம் விரும்பிய உயர் தர பிரிவுக்கும் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.


*இங்கிலாந்தின் லெஸ்டர் மாநகரில்  2000 ஆண்டு முதல் கணிசமான இளம் இலங்கை முஸ்லீம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களின்  வாரிசுகளான  இரண்டாம் தலை முறையினரில்  இருபதுக்கும் மேட்  பட்டவர்கள்      GCSE பரீட்சை;யில் தோற்றியிருப்பது  இதுவே முதல் வருடமாகும்.     


*இந்த மாணவர்கள்  மிக சிறந்த பெறுபேறுகளைப்   பெற்று தமது சமூகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.இவர்கள் அனைவருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் அல்லாஹ்விடம் பிரார்த் தனை புரியுமாறு வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

ஆக்கம்: அஷ் ஷேய்க், அல்ஹாஜ், இஸ்மாயில்  நளீமி,பீ. ஏ. (இலங்கை) 
முதல்வர், அல்பயான் அரபு மையம், லெஸ்டர், இங்கிலாந்து 
2019 ம் ஆண்டு, GCSE பரீட்சையில், இங்கிலாந்து, லெஸ்டர் வாழ் இலங்கை முஸ்லீம் மாணவ மாணவிகள் சாதனை. 2019 ம் ஆண்டு, GCSE  பரீட்சையில், இங்கிலாந்து,  லெஸ்டர் வாழ் இலங்கை முஸ்லீம் மாணவ மாணவிகள் சாதனை. Reviewed by Madawala News on August 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.