மற்றவர்களை நம்பி வெற்றிக்கு அலையாதீர்கள்.... பாகிஸ்தான் அணி மீது கோபத்தில் ரசிகர்கள்.


'உலகக் கிண்ணத் தொடரில் அரை யிறுதிக்குள் நுழைவதற்கு எப்போதும் மற்றவர்களையே நம்பியிருக்காதீர் கள்”
என்று பாகிஸ்தான் அணியை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

இம்முறை உலகக் கிண்ணத் தொட ரில் பாகிஸ்தான் அணி மிகவும் பரிதாபத்துக் குரிய நிலையில் உள்ளது.

பலம் வாய்ந்த நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. ஆனால், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக ளுக்கு எதிரான போட் டி க ளி ல் தோல்வியைத் தழு வியது.

அரையி றுதிக்குள் நுழைய பா கி ஸ்தா  ன் அணிக்கு ஓட்ட ரேட்டிங்  மிகவும் முக்கிய மா கும். ஆனால், மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் படுதோல்வியடைந்ததால், பாகிஸ் தான் அணிக்கு அரையிறுதியில் நுழை வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


அதாவது, கிட்டத்தட்ட தொடரை விட்டே வெளியேறும் நிலையிலும் பாகிஸ்தானுக்கு ஒரு சிறிய வாய்ப்புள்ளது.

இன்றைய தினம் பங்களாதேஷுக்கு எதி ரான போட்டியில் மிக அதிக ஓட்ட வித்தி யாசத்தில் வெற்றிபெறவேண்டும்.316 ஓட் டங்களுக்கு மேல் என்ற வித்தியாசத்தில்  வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சாத்தியம்.


நேற்று முன்தினம் நடந்த போட் டி யில் நியூ ஸிலாந்து அணி இங்கி லாந்தை வீழ்த்தியிருந்தால், பாகிஸ் தான் அணிக்கு வாய்ப்பு ஏற்பட்டி ருக்கும். ஆனால், இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றதால் அந்த வாய்ப்பு பறிபோனது,,


இதனை வைத்து மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது என அந்நாட்டு ரசிகர்கள் கோபத்துடன் சமூக வலை தளங்களில்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 'மற்றவர்களை நம்பி இருக்காதீர் கள், சொந்த பலத்தில் அடுத்த கட்டத் திற்கு முன்னேறுங்கள்' என்று ரசிகர் கள் பலரும் பாகிஸ்தான் அணியை சாடி வருகின்றனர்.

அத்துடன் 'தோல்வியடைந்து விட்டு, இவ்வாறு மற்ற அணிகளை நம்பி இருப்பது சரியா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

மற்றவர்களை நம்பி வெற்றிக்கு அலையாதீர்கள்.... பாகிஸ்தான் அணி மீது கோபத்தில் ரசிகர்கள். மற்றவர்களை  நம்பி வெற்றிக்கு அலையாதீர்கள்.... பாகிஸ்தான் அணி மீது கோபத்தில் ரசிகர்கள். Reviewed by Madawala News on July 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.