மினுவாங்கொடையில் கலவரம் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவர் பிணையில் விடுதலையானர்.


மினுவாங்கொடை நகரத்தில் கடந்த மே மாதம் 13ஆம் திகதி குழப்பம் விளைவிக்கும் வகையில்
செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் அவர்கள் மூவரையும் மினுவாங்கொடை நீதவான் கேசர சமரதிவாகர, நேற்று (17) விடுவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்த   18 சந்தேக நபர்கள், நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, அவர்கள் அனைவரையும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை, சந்தேக நபர்களுக்கு எதிராக சாட்சிகள் காணப்படுமாயின் அன்றைய தினம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
மினுவாங்கொடையில் கலவரம் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவர் பிணையில் விடுதலையானர். மினுவாங்கொடையில் கலவரம் செய்து  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவர் பிணையில் விடுதலையானர். Reviewed by Madawala News on July 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.