இஸ்லாம் பாடத்திட்டத்தில் எதைக் கற்பிக்க வேண்டும் என்பதை முஸ்லிம்களே தீர்மானிக்க வேண்டும்..


இஸ்லாம் பாடத்திட்டத்தில் எதைக் கற்பிக்க வேண்டும் என்பதை முஸ்லிம்களே தீர்மானிக்க வேண்டும்.


ஏப்ரில் குண்டுத்தாக்குதளின் பின்பு முஸ்லிம்களின் பல விடயங்கள் பலத்த விமர்சனத்திற்கு உற்படுத்தியுள்ளனர்.முஸ்லிம் தரப்பு நியாயங்களை சொல்வதற்கு யாரும் இல்லாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது .

பாடசாலைகள் துவக்கம் பலகலைக்கழகம் வரை என்ன கற்பிக்கப்படுகின்றது என்பதை கண்டறிவதற்காக முழுமையாக சிங்கள அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் ஆண்டு வரை படித்த சஹ்ரான் பாடத்திட்டத்தின் மூலம் எதைக் கற்றுக் கொண்டான் என்பது தெரியவில்லை .பிரச்சினைகள் எங்கோ இருக்கும் போது போலியாக தீர்வுகளை தேடுகின்றனர்.

அல்லாஹ்வை தவிர இறைவன் இல்லை என்ற கலிமாவின் பரயோகம் அவர்களுக்கு பிரச்சினையாம்.அல்லாஹ் இறைவன் என்று கூறுங்கள் ஆனால் வேறு இறைவன் இல்லை என்று கூறாதீர்கள் என பலர் பகிரங்கமாக கூறுகின்றனர். பல கடவுள்கள் உள்ளனர் எனக் கூறுவதற்கு பிற சமூகங்களுக்கு உள்ள அதே உரிமை இறைவன் ஒருவன் ,அவன் இனை ,துனை அற்றவன் எனக் கூறுவதற்கு முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையை யாராலும் மறுக்க முடியாது.

இஸ்லாத்தின் அடிப்படையான இறை கோட்பாட்டை பிற சமூகங்களுக்கு தெளிவாக விளங்க வைக்க வேண்டும் .இறவைன் ஒருவன் எனக் கூறுகின்ற அதே மார்க்கம் " மார்கத்தில் நிர்பந்தம் இல்லை (அல் குர்ஆன் )" எனக் கூறுவதை விளங்க வைக்க வேண்டும்.

இங்குள்ள மிகப்பெரிய பிரச்சினை மனித சமூகத்தில் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ள சீரழிவுகளை இஸ்லாம் கோட்பாடு ரீதியாக தெளிவாக எதிர்க்கின்றது .முஸலிம்களையும் ஏனையவர்களைப் போன்று வாழுமாறு நிர்பத்திக்கின்றனர் .பிற சமூகங்களுக்கு அவர்கள் விரும்பியவாறு வாழ்வதற்கு உள்ள அதே உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு,

இதனை நாம் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்ல .இந்த இடத்தில் எமது அரசியல் தலைமைகளின் கவனம் தேவைப்படுகின்றது .தீவிரவாதத்தை ஆதரிக்கும் கருத்துக்கள் இருந்தால் அவை நீக்கப்பட வேண்டும் என்பதில் இரு கருத்தில்லை .ஆனால் எந்த வகையிலும் எமது அடிப்படைகளில் கை வைப்பதற்கு யாரிற்கும் உரிமை இல்லை .

இஸ்லாம் பாடம்திட்டத்தினால் தீவிரவாதம் வளர்வது என்றால் 1983 கலவரம் துவக்கம் மினுவான்கொட வரை தீவிரவாதம் எந்தப்பாடத்திட்டத்தால் வளர்த்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதனையும் கண்டறிய தனியாக முஸ்லிம்களையும் ,தமிழர்களையும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.

அரசு ஊதாரித்தனமாக பேசுவர்களின் கருத்துக்களை எல்லாம் கருத்தில் எடுப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆகத்தானது என்பதை தெளிவாக உணர வேண்டும்.

இஸ்லாம் பாடத்திட்டித்திற்கு பொறுப்பான அதிகாரிகள் உடன் ஒரு பத்திரகையாளர் மாநாட்டை நடத்தி இந்த நாட்டு மக்களுக்கு தெளிவைக் கொடுக்க வேண்டும். உங்களது மெளனம் அவர்களை வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

அச்சப்படாதீர்கள் தெளிவாகப் பேசுங்கள் ,எமது செயல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய கட்டாயம் உள்ளது .சில மடயர்கள் இந்த சமூகத்தின் போக்கை தீர்மானிக்க விடக் கூடாது.
BY:
M.n. Mohamed

இஸ்லாம் பாடத்திட்டத்தில் எதைக் கற்பிக்க வேண்டும் என்பதை முஸ்லிம்களே தீர்மானிக்க வேண்டும்.. இஸ்லாம் பாடத்திட்டத்தில் எதைக் கற்பிக்க வேண்டும் என்பதை முஸ்லிம்களே தீர்மானிக்க வேண்டும்.. Reviewed by Madawala News on July 06, 2019 Rating: 5