பதவிக்காலம் எப்போது நிறைவடைகிறது என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வினவ மைத்திரிபால தீர்மானம் ?!தனது பதவிக்காலம்  எப்போது நிறைவடைகிறது என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வினவ
மைத்திரிபால சிரிசேன  தீர்மானித்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.

ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களாக  இருந்தது  5  வருடங்களாக  19 ம் திருத்ததில் குறைக்கப்பட்ட நிலையில் மைத்திரிபால சிறிசேன 2015  ஜனவரி 8 பதவியேற்றிருந்தார். அவரது பதவிக்காலம் இவ்வருட இறுதிக்குள் நிறைவடைய வேண்டும் என கூறப்பட்டாலும் 19 ம் திருத்தம் 2015 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் 6 வருடம் ஜனாதிபதியாக இருக்க சத்தியம்பிரமாணம் செய்த  ஜனாதிபதியின் 5 வருட காலமாக குறைக்கப்பட்ட சட்டம் 2015 மார்ச் 15 ம் திகதி நிறைவேற்றப்பட்டதால் அன்றைய தினம் முதல் 5 வருட பதவிக்காலம் கணக்கிடப்பட வேண்டும் என சட்ட வல்லுனர்கள் சிலர் கூறியுள்ளனர்.

2015 ஜனவரி 8’ ம் திகதி 6 வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்க ஜனாதிபதி மைத்திரி சத்தியப்பிரமானம் செய்துள்ள நிலையில்  2015 மார்ச் 15 ம் திகதி 19’ம் திருத்தத்தம் கொண்டு வரப்பட்டதால் அவரது பதவிக்காலம் அன்று முதல் 5 வருடங்களாக கணக்கிடப்படும் என உச்ச நீதிமன்றம் தீர்பளித்தால் தேர்தல் அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போகும் என கூறப்படுகிறது..
பதவிக்காலம் எப்போது நிறைவடைகிறது என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வினவ மைத்திரிபால தீர்மானம் ?!  பதவிக்காலம் எப்போது நிறைவடைகிறது என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் வினவ மைத்திரிபால தீர்மானம் ?! Reviewed by Madawala News on July 06, 2019 Rating: 5