ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி 11 நீதிமன்றம் நாடவுள்ள மைத்திரி



இந்த வாரம் உயர்நீதிமன்றத்திடம் முக்கிய பரிந்துரை ஒன்றை  
வினவவுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டு அதனை நடைமுறைக்கு கொண்டுவந்த தினமான 2015ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதியே ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிப்பதாக ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல 19’ம் திருத்தம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் சிக்கல் இருப்பதாகவும் அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தனது பதவிக்காலம் 2020இல் முடிவடைவதாகக் கருதும் ஜனாதிபதி அதனை விளக்கிக் கூறுமாறு  உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்க உள்ளதாக கூறப்படும் அதேவேளை 19 ம் திருத்தம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பிலும் கருத்து கேட்க உள்ளதாக மற்றுமொறு தகவல் தெரிவிக்கின்றது.

ஜோதிட ஆலோசனைகளின்படி எதிர்வரும் 11ஆம் திகதி முக்கிய  கடிதத்தை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பவுள்ளார் ஜனாதிபதி.

ஏற்கனவே ஜனாதிபதியின் பதவிக்காலம் இவ்வருடம் முடிவடைவதாக உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் ஜனாதிபதி மீண்டும் இவ்வாறு விளக்கம் கோரவுள்ளமை அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி 11 நீதிமன்றம் நாடவுள்ள மைத்திரி ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி 11  நீதிமன்றம் நாடவுள்ள மைத்திரி Reviewed by Madawala News on July 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.