கல்முனையை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும்.


முஸ்லிம்களின் தலைநகரான கல்முனையை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இலங்கை வாழ் ஒவ்வொரு
முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும். குழுக்களை அமைபதால் மட்டும் மக்களின் தேவைகளை நிவர்த்திக்க முடியாது.


அத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தமிழ் சகோதரர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் அவர்களுக்கான பிரதேச செயலகத்தை பெறுவது என்பதைவிட அடையாளமற்று இருந்த சில அரசியல்வாதிகள் தங்களது முகவரிகளை புதுப்பிக்கும் நிகழ்வாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக சிந்தனையாளருமான யஹ்யாகான் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்.. கல்முனை வடக்கு பிரதேசத்துக்கு செயலகம் அவசியம் என்று அந்த மக்கள் கருதினால் துறவிகளதும் அரசியல்வாதிகளதும் அஜந்தாக்களுக்கு அடிபணிந்துவிடாது சிவில் சமூக தலைவர்கள் பேசி சிறந்த முடிவுக்கு வரமுடியும். மறுபுறம் கல்முனை விடயத்துக்கு தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்க பல்வேறு எத்தனிப்புக்கள் எடுக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் முப்பது வருடங்களாக உள்ளுராட்சிமன்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராடிவரும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


இந்த மக்களது பிரச்சினையை தீர்ப்பதற்கும் பல்வேறு குழுக்கள் போடப்பட்டன அவற்றுக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை. அந்தமக்களின் கோரிக்கையும் சமாந்தரமாக தீர்க்கப்படவேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.
கல்முனையை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். கல்முனையை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். Reviewed by Madawala News on June 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.