அண்மையில் கைதாகி பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் மீது, பாடசாலைகளில் ஓரக்கண் பார்வை.


கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் பல இடங்களில் நடந்த மிலேச்சத்தனமான
 தாக்குதலுக்குப் பின்னர், (நாட்டில்) குறிவைக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தில் பலர் அநியாயமாக கைதாகி சிலர் விடுவிக்கப்பட நிலையில் இன்னும் அதிகமானோர் சிறையில் வாடும் இன்றைய சூழலில்,


பாடசாலைகளில்  ஆசியர்களாலும் சக மாணவர்களாலும் கைதானவர்கள் பிள்ளைகள் பல சங்கடங்களுக்கு உள்ளாகியுள்ளதை அறியமுடிகிறது.


∆ ஏற்கனவே உளரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அந்தப் பிள்ளைகளை ஓரங்கட்டி மேலும் பாதிப்படையச் செய்வது பெரும் அநியாயம்.


∆ இதனை அதிபர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து அந்தப் பிள்ளைகளை அரவணைத்து நடப்பதோடு பிற பிள்ளைகள் கேளி கிண்டல் செய்யாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.


∆ இது விடயத்தில் அதிபர் அதிக அக்கறை செலுத்தி ஆசிரியர்களுக்கு   தெளிவூட்டல்களை வழங்கி வழிநடத்தக் கடமைப்படுள்ளார்.


செய்தி/Message:- 
உடல் ஜாடையாலும் (Body Language) நிதர்சனமாகவும் பிறருக்கு குறிப்பாக மாணவர் சமுதாயத்திற்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு நடத்தையை மேம்படுத்திக்கொள்வோம்.

முக்கிய குறிப்பு:-
இதே நேரம், அண்மையில் கைதானவர்களின் பிள்ளைகள் பாடசாலைகளில் சக மாணவர்கள்களாலும் ஆசிரியர்களாலும்  உளரீதியான பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை உளவுத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

*எனவே அவதானமாக இருக்கவும்.*

தகவல்,
சுல்பி ஸமீன்.
13-06-2019
அண்மையில் கைதாகி பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் மீது, பாடசாலைகளில் ஓரக்கண் பார்வை. அண்மையில் கைதாகி பாதிக்கப்பட்டவர்களின்  பிள்ளைகள் மீது, பாடசாலைகளில் ஓரக்கண் பார்வை.  Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5