முஸ்லிம் கூட்டமைப்பு ; முஸ்லிம் MPக்கள் மற்றும் ஜம்மியதுல் உலமாவிற்கு முஸ்லிம் சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் ..



இலங்கையில் உள்ள முஸ்லிம் விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள், இலக்கிய வட்டக் கழகங்கள்,
இதர முஸ்லிம் அமைப்புக்கள், முஸ்லிம் ஆசிரியர் சங்கங்கள், முஸ்லிம் டாக்டர் சங்கங்கள், முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், பள்ளிவாசல் நிர்வாக சபையினர், இப்படி எல்லோருமாக இயன்றளவு அவசரமாக ஒன்றுபட்டு நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அ.இ.உலமா சபைக்கும் நமது ஆதங்கத்தையும், கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டும். 

அந்தக் கோரிக்கையின் மூலப்பொருள் "ஒற்றுமையே_எமது_பலம்" என்ற விடயத்தைத்தான் நாங்கள் விரும்புகின்றோம் என்பதை அவர்களுக்கு உறுதிபட தெரிவிக்கவேண்டும். இதுவே அவர்களுக்கான செய்தியாவும் இருக்கவேண்டும். 

இதனை அவசரமாகச் செய்யுங்கள். தானுண்டு, தன்பாடுண்டு என்ற நினைப்பில் இருந்துவிடாதீர்கள். சமூகத்தைப்பற்றி சிந்திக்காதவன் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது என்பது மட்டுமல்ல, நாளை மஃசரில் இறைவனின் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிவரும்.ஆகவே ஒன்றுபடுங்கள் உண்டுவாழ்வு என்பதனை உறுதிப்படுத்துங்கள். 

முஸ்லிம் கூட்டமைப்பு அமைக்க முஸ்லிம் MPக்கள் மற்றும் ஜம்மியதுல் உலமாவிற்கு முஸ்லிம் சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் ..

#அல்லாஹ் நமக்கு ரஃமத் செய்வானாக..!

MHM.இப்றாஹிம்
கல்முனை.
முஸ்லிம் கூட்டமைப்பு ; முஸ்லிம் MPக்கள் மற்றும் ஜம்மியதுல் உலமாவிற்கு முஸ்லிம் சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் .. முஸ்லிம் கூட்டமைப்பு ; முஸ்லிம் MPக்கள் மற்றும் ஜம்மியதுல் உலமாவிற்கு முஸ்லிம் சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் .. Reviewed by Madawala News on June 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.