Exclusive ..மைத்திரி - மஹிந்த உறவில் விரிசல்



ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்‌ஷ இடையே இருந்த
சுமுகமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.

இதன் வெளிப்பாடாகாவே அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவையில் அரசின் உள்வீட்டு சண்டைக்காரணமாக மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஆட்சியை பிடித்துவிடுவார் என்ற தனது ஆதங்கத்தை ஜனாதிபதி வெளிப்படுத்திருந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் பிரதமராக்கிய பின்னர் அவரின் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக எண்ணம் கொண்டிருந்தாகவும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நிலைமைகள் காரணமாக அவரது எண்ணம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரை ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதிக்க வைக்க முன்னெடுப்புகளை மஹிந்த அணி மேற்கொண்டு வரும் நிலையில் மைத்திரிபால சிறிசேன தான் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் தயாசிறி “ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை  மைத்திரிக்கு வழங்குவதாக இருந்தால் தான் தாங்கள் பொதுஜன பெரமுனவுடன் இணையலாம் என குறிப்பிட்டுள்ளமை மஹிந்த மைத்திரி அணியிடையே ஏற்பட்டுள்ள விரிசலை காட்டுவதாக கூறப்படுகிறது.

அண்மையில் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்ட ஞானாசார தேரரும் சில சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதி காலத்தில் இஸ்லாம் அடிப்படை வாதம் தொடர்பில்  தாங்கள் சுட்டிக்காட்டிய பல விடயங்களை அவர் கண்டுகொள்ள வில்லை என்ற ரீதியில் விமர்சனங்களை முன்வைத்துள்ளமையும் மஹிந்தவை விட மைத்திரி கம்பீரமானவர் என கூறியுள்ளமை  ஜனாதிபதி மைத்திரி மஹிந்த விரிசலை காட்டுவதாக கூறப்படுகிறது.

தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் மஹிந்த அணிக்கு ஆதரவளிக்க மாட்டேன் என கூறியுள்ளமை அண்மையில் ஏற்பட்ட விரிசலின் வெளிப்பாடு என கூறப்படுகிறது.
Exclusive ..மைத்திரி - மஹிந்த உறவில் விரிசல் Exclusive ..மைத்திரி - மஹிந்த உறவில் விரிசல் Reviewed by Madawala News on June 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.