ஏ.பி. டிவிலியர்ஸ் மீண்டும் தென்னாபிரிக்க அணிக்காக விளையாடுவதற்கு முன்வந்தார்.. ஆனால் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.


தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஏ.பி. டிவிலியர்ஸ் மீண்டும் தென்னாபிரிக்க அணிக்காக
விளையாடுவதற்கு முன்வந்தார் எனவும் எனினும் தென்னாபிரிக்க அணி முகாமையாளர்கள் இந்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக் இன்போ இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

உலககிண்ணப்போட்டிகளிற்கான அணியை தென்னாபிரிக்கா அறிவிப்பதற்கு 24 மணித்தியாலத்திற்கு முன்னதாக ஏபிடிவிலியர்ஸ்  இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

ஏபிடிவிலியர்ஸ் அணியின் தலைவர் டுபிளசிஸ், பயிற்றுவிப்பாளர் ஒட்டிஸ் கிப்சன்,தெரிவுக்குழுவின் தலைவர் லின்டாஜொன்டி ஆகியோரிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது  ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அணியின் முகாமையாளர்கள் இந்த வேண்டுகோளை நிராகரித்துள்ளனர்.

ஏபிடிவிலியர்சின் வேண்டுகோள் பரிசீலிக்கப்படவில்லை  என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரை மீண்டும் அணியில் சேர்த்துக்கொண்டால் டிவிலியர்ஸ் ஓய்வை அறிவித்த பின்னர் கடந்த ஒரு வருட காலமாக விளையாடிவரும் அணிக்கு அநீதி இழைத்தது போலாகிவிடும் என அணியின் முகாமைத்துவம் கருதியது என  கிரிக்கின்போ தெரிவித்துள்ளது.


ஏபிடிவிலியர்ஸ் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ள போதிலும் தென்னாபிரிக்க அணிக்கு ஆதரவளிப்பது குறித்து முழுமையான கவனத்தை செலுத்திவருவதாக தெரிவித்துள்ளார்.
ஏ.பி. டிவிலியர்ஸ் மீண்டும் தென்னாபிரிக்க அணிக்காக விளையாடுவதற்கு முன்வந்தார்.. ஆனால் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஏ.பி. டிவிலியர்ஸ் மீண்டும் தென்னாபிரிக்க அணிக்காக விளையாடுவதற்கு முன்வந்தார்.. ஆனால் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. Reviewed by Madawala News on June 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.