பொலிஸார் பொறுமையுடன் செயல்படுகிறோம்... இது எங்கள் பலவீனம் என யாரும் எண்ணக்கூடாது.


பொலிஸார் பொறுமையுடன் செயல்படுவது பொலிசாரின் பலவீனம் என எண்ணக்கூடாது என்று பதில்
பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரடத்ன தொவித்தார்.

நாசகாரச் செயல்களில் சம்பந்தப்பட்ட நபர்களை பிணையில் விடுதலை செய்ய முடியாத வகையில் கைது செய்து பத்து வருடகால சிறைத்தண்டனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாசகார செயல்களை நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகவும் கொடிய பயங்கரவாத இயக்கத்தை இல்லாதொழிப்பதில் அளப்பரிய சேவையாற்றிய பொலிசாருக்கு இத்தகைய சிறிய கடும்போக்குக் குழு ஒரு பொருட்டல்ல. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதற்கொண்டு இதுவரையிலான காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைப் பொறுத்தவரையில், மக்கள் இனமத பேதம் இன்றி எமக்கு உதவியிருக்கிறார்கள்.

ஆனால், இதுபோன்று கொஞ்சம் உதவி செய்யாத கடும்போக்குக் குழுவொன்று மக்களின் சொத்துக்களோடு அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறார்கள். இதனை நிறுத்த வேண்டும், நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது அதிகாரம் செலுத்தி நாட்டை சீர்குலைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாசகாரச் செயல்களில் ஈடுபடுவோர் கவனமாக இருப்பது அவசியம். நாசகாரச் செயல்களில் சம்பந்தப்பட்ட நபர்களை பிணையில் விடுதலை செய்ய முடியாத வகையில் கைது செய்து, பத்து வருடகால சிறைத்தண்டனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாசகார செயல்களை நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
பொலிஸார் பொறுமையுடன் செயல்படுகிறோம்... இது எங்கள் பலவீனம் என யாரும் எண்ணக்கூடாது. பொலிஸார் பொறுமையுடன் செயல்படுகிறோம்... இது எங்கள்  பலவீனம் என யாரும்  எண்ணக்கூடாது. Reviewed by Madawala News on May 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.