ஷரிஆ பல்கலைக்கு அனுமதி இல்லை ! மத்தரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ்



கிழக்கு ஷரிஆ பல்கலைக்கழகம் மற்றும் மத்ரஸாக்கள் தொடர்பில் முஸ்லிம் மைச்சர்கள் ,
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட முறையான கலந்துரையாடல்களில் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய ஷரியா பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்க முடியாது.அத்துடன் மத்ரஸா பாடசாலைகளை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (20) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கலாம். இன்று.பாடசாலைகளுக்கு பிள்ளைகளை பெற்றோர் அச்சமின்றி அனுப்பி வைப்பது அவசியமாகும். 

அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள் மாணவர்களின் திர்காலத்திற்கு எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்த நாமே வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க கூடாது.

கிழக்கு ஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த  விசாரணைகளை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட
அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க பிரதமர்  தெளிவுபடுத்தினார். 



ஷரிஆ பல்கலைக்கு அனுமதி இல்லை ! மத்தரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் ஷரிஆ பல்கலைக்கு அனுமதி இல்லை ! மத்தரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் Reviewed by Madawala News on May 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.