பஞ்சாப் அணியை அசத்தலாக வென்று தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது RCB .


பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு.. அதனை முறியடித்து RCB அசததல் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக  டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்தது.


பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 99 (64) ரன்கள் எடுத்தார். லோகேஷ் ராகுல் மற்றும் மன்தீப் சிங் 18 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து பெங்களூர் அணி 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி 19.2 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து வென்றது.

கோஹ்லி 67 ஒட்டங்களும், டிவில்லியர்ஸ் 59 ஒட்டங்களும் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தனர்.

இந்த வெற்றி IPL 2019 தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் வெற்றியாகும்.

பஞ்சாப் அணியை அசத்தலாக வென்று தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது RCB . பஞ்சாப் அணியை அசத்தலாக வென்று தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது RCB . Reviewed by Madawala News on April 13, 2019 Rating: 5