இரத்தினபுரியில் தமிழ் மொழி மூல ஊடகப் பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரல்.


எம்.எல்.எஸ்.முஹம்மத் -  இரத்தினபுரி
இரத்தினபுரி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் சமூகப் பிரச்சினைகளை வெளிக் கொண்டுவரும் நோக்குடனும்,
அவற்றிற்கு உரிய தீர்வுகளை விரைவாக  பெற்றுக் கொடுக்கும் நோக்குடனும் தமிழ் மொழி மூல புதிய இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கான செயற் திட்டமொன்றை ஊடகக் கற்கைகள் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையம் ஆரம்பித்துள்ளது.

இதற்கிணங்க மேற்படி நிலையம் முதற்கட்டமாக இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலைக் கல்வியை நிறைவு செய்துள்ள 25 மாணவர்களுக்கான ஆறு மாத கால ஊடகப் பயிற்சி நெறி ஒன்றினை இரத்தினபுரி நகரில்  ஆரம்பிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இலங்கையில் உள்ள பல்வேறு முக்கிய ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப் படவுள்ள இப்பயிற்சி நெறியில் ஊடக அடிப்படைகள், செய்தி எழுதல், செய்தி ஒளிபரப்பு, வானொலி ஊடகம்,சமூக ஊடகங்கள் மற்றும்  புலனாய்வுக் கட்டுரைகளை  எழுதல் உட்பட ஊடக ஆளுமை விருத்தி தொடர்பான விடயங்களும் விரிவாக ஆராயப் படவுள்ளன.

இப்பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு  அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதுடன் ஊடகத் துறையில் தொழில் புரிவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளன.

மேற்படி ஊடகப் பயிற்சி நெறியை தொடர விரும்பும் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலையிட்டு விலகியவர்கள் மற்றும் ஊடகத் துறையில் ஈடுபட ஆர்வம் மிக்கவர்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலதிகத் தொடர்புகளுக்கு பணிப்பாளர்,ஊடகக் கற்கைகள் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையம்,(ஹனீபா மஸ்ஜித் கட்டிடம்) இலக்கம் 642,கொழும்பு வீதி,புது நகர்,இரத்தினபுரி,தொலைபேசி இலக்கம் 077 571 30 55 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரியில் தமிழ் மொழி மூல ஊடகப் பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரல். இரத்தினபுரியில் தமிழ் மொழி மூல ஊடகப் பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரல். Reviewed by Madawala News on April 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.