விபத்தால் துண்டிக்கப்படும் உடல் பாகங்களை பொருத்துவதற்கு சிறந்த முதலுதவி .



Dr S.Branavan MBBS (Colombo) 
அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக, மருத்துவத்துறை இலங்கையில் முழுமையடையாத
போதிலும், இவ்வாறு சத்திரசிக்கிச்சையின் மூலம், முற்றாக  துண்டாக்கப்பட்ட அவயவங்களையும் மீளப்பொருத்தகூடியளவில் போதனாவைத்தியசாலைகள் திறன்பெற்றுள்ளன.  இவை, சற்று சிக்கலான சத்திரசிகிச்சையாக இருந்தபோதிலும், இதன் பெறுபேறு,  வைத்தியசாலைக்கு எடுத்துவர முதல்,  செய்யப்பட வேண்டிய  நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது,

1. துண்டிக்கப்பட்ட பாகத்தை பத்திரமாக சுத்தமான பொலித்தீன் பையினுள் வைத்து, அதனை பனிகட்டிகள் நிரம்பிய பெட்டியில் வைத்து துரிதமாக  வைத்தியசாலைக்கு எடுத்துவர வேண்டும். (தாழ் வெப்பநிலை கலஇறப்பை தாமதப்படுத்தும்)

2. மேலதிகமாக அவயவங்களில் என்புமுறிவு இருக்கலாம் என ஊகிக்கும் பட்சத்தில், அந்த பகுதியை அசையாது (immobilization) மர தகட்டினை /பலகையை வைத்து  இஸ்திரபடுத்த முடியும்.

3. விபத்துக்குள்ளான  நபருக்கு உணவு நீரினை கொடுப்பதை தவிர்ப்பது , நேர விரயமின்றி உடனடியாக பொது மயக்கமருந்து கொடுத்து சத்திரசிகிச்சைக்கு எடுத்து செல்ல வழிவகுக்கும்.

இப்பதிவு, மக்களின் பொது மருத்துவ மற்றும் முதலுதவி அறிவினை மேம்படுத்துவது, வைத்தியர்களின் வினைத்திறனையும், சிறந்த பெறுபேறுகளையும் அடைய வழிவகுக்கும் என்ற தன்னலத்துடன் பதியப்பட்டது.

(படங்கள் காலி போதனா வைத்தியசாலையில்  இடம்பெற்ற சத்திரசிகிச்சையில் இருந்து பெறப்பட்டது)
விபத்தால் துண்டிக்கப்படும் உடல் பாகங்களை பொருத்துவதற்கு சிறந்த முதலுதவி . விபத்தால் துண்டிக்கப்படும் உடல் பாகங்களை பொருத்துவதற்கு சிறந்த முதலுதவி . Reviewed by Madawala News on April 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.