சஜித் - ரவி மோதலுக்கான காரணம் இதுதானாம்!!



ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு
அமைச்சரும் ஐ.தே .க.பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையினை அடுத்தே சஜித் ரவி இடையே மோதல் புதிய கோணத்தில் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சி தலைவராக ரவி கருனாநாயகக் செயற்படும் நிலையில் பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நிராகரித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளூரத் தயாராகிவரும் அமைச்சர் சஜித் பிரேமதாச – அதற்கு முதல் தனது தந்தையாரின் தொகுதியில் இருந்து களமிறங்க ஆவல்கொண்டே இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் இது கட்சிக்குள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கலாம் என்பதால் நிராகரித்துள்ள ரணில் அம்பாந்தோட்டையில் இருந்தே பணிகளை செய்யுமாறு சஜித்தை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அமைச்சர் ரவி கருணாநாயக்க சஜித்துடன் மோத ஆரம்பித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமென சொல்லப்படும் அதேசமயம் பிரதமரும் கொழும்பு மாவட்டத்திற்குள் புதிய அமைப்பாளர்களை நியமிக்க விரும்பவில்லையென அறியமுடிந்தது.
சஜித் - ரவி மோதலுக்கான காரணம் இதுதானாம்!! சஜித் - ரவி மோதலுக்கான காரணம் இதுதானாம்!! Reviewed by Madawala News on April 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.