இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறிபிடித்த மனநிலை உடையவர்கள் ; சம்பிக - Madawala News Number 1 Tamil website from Srilanka

இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறிபிடித்த மனநிலை உடையவர்கள் ; சம்பிக
இஸ்லாமிய பயங்கரவாதிகள் தெளிவான வெரிப்பிடித்த சமய மணநிலை உடையவர்கள் என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.


அரபு நாடுகளில் செயற்படும் மிலேச்ச பயங்கரவாதிகளே இலங்கையில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்பதை நாம் தயக்கமின்றி  கூறுகிறோம்.


2012 - 13 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐ எஸ் அமைப்பு கிலாபத் ஆட்சியை பிரகடணம் செய்த பின்னர் இலங்கையில்  இருந்து ஒரு குழு ஐ எஸ் இல் இணைந்துகொண்டது.அதற்கு தலைமை தாங்கியது கண்டியை சேர்ந்த திருத்துவ கல்லூரி மற்றும் இங்கிலாந்தில் கல்வி  பயின்ற  நிலாம் என்பர். 


அதனை பலர் மறுத்த போதும் இப்போது அவ்வாறு அவர்கள் குடும்பத்துடன் 45 பேர் வரை சென்று சிரியாவில் ஐஎஸ் அமைப்புடன் இணைந்து போரில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


நிலாம் தற்போது மரணமடைந்துள்ள போதும் அவரது ஆதரவாளர்கள் இலங்கையில் செயற்படுகின்றனர்.


ஐ எஸ் அமைப்புக்கு தற்போது ஆட்சி செய்ய பூமி ஒன்றில்லை.அவர்களின் குழுவில் 45 ஆயிரம் வெளிநாட்டவர்கள் இருந்தனர். மாலைதீவில் 300 பேரும் இலங்கையில் 45 பேரும் ஐ எஸ் இல் இருந்தனர்.

 


இலங்கையில் இருந்து சென்ற குழுவுடன் சஹ்ரான் என்பவர் இணைந்து கொண்டுள்ளார்.அவருடன் இணைந்த குழுவே இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இவர்கள் சுமார் 300 பேர் கொண்ட குழு.இவர்கள் பசியை போக்க இதை செய்யவில்லை மாறாக இவர்கள் அடைப்படை வாதத்தில் ஊரி இதனை செய்கின்றனர் என கூறியுள்ளார்.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறிபிடித்த மனநிலை உடையவர்கள் ; சம்பிக  இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறிபிடித்த மனநிலை உடையவர்கள் ; சம்பிக Reviewed by Madawala News on April 28, 2019 Rating: 5