கணவன் தாக்கியதில் இளம் மனைவியும், அவரது தாயாரும் பலி.


திஸ்ஸமஹாராமை, சந்துன்கமுவ பிரதேசத்தில் நபரொருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை
தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த மனைவியும், மாமியாரும் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

வீரவில பிரதேசத்தை சேர்ந்த கிராம சேவகராக பணியாற்றும் 25 வயதான இளம் பெண்ணும் 54 வயதான அவரது தாயாருமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலைகள் நடந்துள்ளதாக திஸ்ஸமஹாராமை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கணவன் தாக்கியதில் இளம் மனைவியும், அவரது தாயாரும் பலி. கணவன் தாக்கியதில் இளம் மனைவியும், அவரது தாயாரும் பலி. Reviewed by Madawala News on March 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.