உங்கள் அப்பாவின் கொள்கைகளே தீவிரவாதிகளை ஊக்குவித்தன ; டிரம்பின் மகளுக்கு டிவிட்டரில் பதில்



நியுஸிலாந்து தீவிரவாத  தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்கள்
கண்டனங்களை வெளியிட்டு வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் மகள் இவன்கா தனது அனுதாப செய்தியை டிவிட் செய்திருந்தார்.

குறித்த டிவிட்டுக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து பலரும்  பதில்களை அளித்து வருகின்றனர்.

 உங்கள் அப்பாவின் கொள்கைகளே தீவிரவாதிகளை ஊக்குவித்த என இவன்காவின் டிவிட்டுக்கு பலர் பதில் அளித்துள்ளனர்.

அது தவிர பலரும் அவரது டிவீட்டுக்கு நேர் எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தீவிரவாதி டெரண்ட் நீதிமன்றில் காட்டும் சைகை இலிமினாட்டி சைகை என அனைவராலும் கூறப்படும் சைகை எனவும் அதே சைகையை அமெரிக்க அதிபரும் பல இடங்களில் காட்டியுள்ளமை சமூக வலைகளில் பேசு பொருளாகியுள்ளது. 

டெரண்ட் காட்டிய அந்த சைகை  (WHITE POWER' SIGN) எனவும் தான்  செய்தது சரியே என்பதை குறிக்கும் விதமாக அவன் இப்படி காட்டியுள்ளான் எனவும், வெள்ளையர்களின் மேலாதிக்கத்தை குறிக்கும் அடையாளம் என்றும் சில ஊடகங்கள்  குறிப்பிட்டுள்ளன.
உங்கள் அப்பாவின் கொள்கைகளே தீவிரவாதிகளை ஊக்குவித்தன ; டிரம்பின் மகளுக்கு டிவிட்டரில் பதில் உங்கள் அப்பாவின் கொள்கைகளே தீவிரவாதிகளை ஊக்குவித்தன ; டிரம்பின் மகளுக்கு டிவிட்டரில் பதில் Reviewed by Madawala News on March 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.