புகையிரத விடுதி குடியிருப்பாளர்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைக்கு தீர்வு !



மாளிகாவத்தை மைத்தரி வீதியில் வசித்து வந்த  புகையிரத விடுதி குடியிருப்பாளர்களின்
நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினை மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ். சாலி அவர்களின் உரிய நேர தலையீட்டால் தீர்த்து வைக்கப்பட்டது.

கழிவு நீர்க் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக குடியிருப்புப் பகுதியில் உள்ள 80 வீடுகளில் 40 வீடுகள் அசெகரியத்திற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அத்துடன் வெள்ளநீர் பாய்தோடுவதால் அங்கு வசிப்பவர்கள் தங்கள் இயல்பான வேலையைக் கூட செய்ய முடியாத நிலையும் காணப்பட்டது.

இது தொடர்பாக சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளியைப் பார்வையிட்ட ஆளுநர் ஞாயிற்றுக்கிழமை குறித்த இடத்திற்குச் சென்றதுடன்,   கழிவு நீரை அகற்றுவதற்குரிய உரிய நடவடிக்கைகளை எடுக்க கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிட்டார். ஆளுநரின் தலையீட்டால் பகல் நேரத்திற்கு முன்னரே அனைத்து இடமும் தூய்மையாக்கப்பட்டது. இதனால் குடியிருப்பாளர்கள் மிக மகிழ்வடைந்தனர்.

அகற்றப்படாத குப்பைகளையும் அங்கு கண்ணுற்ற போது அவற்றையும் உடனடியாக நீக்குமாறும்  கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிட்டார். 

மேலும் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதுசுற்றுச்சூழல் மாசுபாட்டின் மிக மோசமான நிலைமையைக் கண்டு அதிர்ச்சியடைந்திருப்பதாகக் கூறியதுடன், இது குடியிருப்பாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல்அயற் சூழலிற்கும் பெரும் சுகாதார சீர்கேடுகளை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டார்.
புகையிரத விடுதி குடியிருப்பாளர்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைக்கு தீர்வு ! புகையிரத விடுதி குடியிருப்பாளர்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைக்கு தீர்வு ! Reviewed by Madawala News on February 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.