fake IDகளை உருவாக்கி , கீழ்த்தர காழ்ப்புணர்ச்சி கொண்ட மட்டகரமான பதிவுகளை இடுபவர்கள் அடையும் இலாபம் தான் என்ன?


இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் இடம் பிடிப்பது ஒரு இலகுவாக காரியமல்ல. அதிலும், சகோதரர் சிராஸின்
தெரிவானது திறமைக்குக் கிடைத்த அசல் அங்கீகாரங்களில் ஒன்று என்றே சொல்லலாம்.

ஏனெனில், கிரிக்கட் என்பது நாங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பது போன்றதல்ல. அதன் பின்னணியில் இருக்கின்ற அரசியல், கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டது. அவ்வாரான ஒரு சூழலில் இத்தேர்வு உச்சகட்ட மகிழ்ச்சிக்குறியது.

யார் விளையாடினாலும்; இல்லாவிட்டாலும் இலங்கை அணி எங்களது அணி. அதன் வெற்றி எங்களது வெற்றி. அதில், எங்களிலிருந்தே ஒருவர் தெரிவாகுவது எவ்வளவு ஆனந்தமானது? அந்த சந்தோஷம் எவ்வளவு இன்பகரமாது? ஒரு சிறுபான்மை சமூகம் என்ற வகையில் எவ்வளவு பெருமைக்குறிய ஒரு அடைவு அது?

பல படித்தரங்கள் கொண்ட ஒன்றில் முக்கிய ஒரு கட்டத்தில் இருக்கின்றார் சிராஸ். இதுதான் நாங்கள் அவருக்கு உளரீதியான உறுதியை வழங்க வேண்டிய முக்கிய தருனம். 

துரதிர்ஷ்டவசமாக, சில சகோதரர்களின் பதிவுகள், குறிப்பாக fake IDகளை உருவாக்கி சிராஸ் குறித்து இடுகின்ற அர்த்தமற்ற பதிவுகளை பார்க்கின்ற போது இவ்வளவு கீழ்த்தர காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும் எம்மத்தியில் இருக்கின்றார்களா என்று வியக்க வைக்கின்றது.

அந்த மட்டகரமான செயலினால் கிடைக்கின்ற இலாபம் அல்லது இன்பம்தான் என்ன? குரோத மனப்பாங்கின் உச்சகட்ட வெளிப்பாடே அது எனலாம்.

இலங்கை அணி இரண்டு நாட்களுக்கு முன்னர் உலகம் போற்றுகின்ற ஒரு சாதனையை நிகழ்த்தியது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தென் ஆபிரிக்க சுற்றுப் பயணத்தின், இலங்கை அணியில்  சிராஸும் ஒருவராக இருந்தார் என்பதுவே எவ்வளவு பெருமைக்குரியது.

லசித் மாலிங்க கூட சிராஸ் போன்று பல படித்தரங்களைத் தாண்டித்தான் சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டியிருந்தது. 

அவர் பொறுமை காக்கவில்லை என்றால் உலக சாதனை வீரனாகியிருக்க முடியுமா? அது போன்று ஒருநாள் உலக நாயகனாக சிராஸ் வலம் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, "இன்ஷா அல்லாஹ்"
- இர்பான் காதர் – அக்குரணை
fake IDகளை உருவாக்கி , கீழ்த்தர காழ்ப்புணர்ச்சி கொண்ட மட்டகரமான பதிவுகளை இடுபவர்கள் அடையும் இலாபம் தான் என்ன? fake IDகளை உருவாக்கி , கீழ்த்தர காழ்ப்புணர்ச்சி கொண்ட மட்டகரமான  பதிவுகளை இடுபவர்கள் அடையும் இலாபம் தான் என்ன?  Reviewed by Madawala News on February 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.