மாகந்துரே மதூசை கைது செய்வது தொடர்பில் ஏற்கனவே UAE வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தோம்.


சமகால அரசாங்கத்தின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு முயற்சிகள் வலுவடைந்துள்ளன
என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாதாள கும்பலைச் சேர்ந்த மாகந்துரே மதூஸ் என்பவரை கைது செய்தமை குறித்து ஐக்கிய அரபு எமிரேற்சின் வெளிவிவகார அமைச்சருடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரதமர் கூறினார்.

புளத்சிங்கள பிரதேசத்தில் நேற்று (25) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பிரதமர், எவரேனும் சுயாதீன ஆணைக்குழுவின் மீது சேறு பூச முனைந்தால் அதன் மூலம் போதைப் பொருள் ஒழிப்பு முயற்சிகள் சீர்குலையும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதன் போது புளத்சிங்கள எகல்ஓயா பல்நோக்குக் கட்டிடத்தையும், வாராந்தச் சந்தையையும், பொருளாதார மத்திய நிலையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

அரசியல் யாப்பின் மீதான 19 வது திருத்தத்தின் மூலம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை ஸ்தாபித்ததால், நாட்டிற்குள் நிகழ்ந்த போதைப் பொருள் கடத்தல் முயற்சிகளை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் முயற்சிகள் வேகம் பெற்றதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)
மாகந்துரே மதூசை கைது செய்வது தொடர்பில் ஏற்கனவே UAE வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தோம். மாகந்துரே மதூசை  கைது செய்வது தொடர்பில் ஏற்கனவே  UAE  வெளிவிவகார அமைச்சருடன்  பேச்சுவார்த்தை நடத்தி இருந்தோம். Reviewed by Madawala News on February 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.