காங்கேயனோடை அஸ்லம், நாடளாவியரீதியலான இரண்டு போட்டிப் பரீட்சைகளிலும் (SLAS, SLEAS) சித்தியுற்று வரலாற்று சாதனை .


நாடளாவியரீதியலான இரண்டு போட்டிப்  பரீட்சைகளிலும்  (SLAS, SLEAS)  சித்தியுற்று  வரலாற்று
 சாதனை  படைத்த காங்கேயனோடை  அஸ்லம்

மட்டக்களப்பு மாவட்டம், காங்கேயனோடை கிராமத்தை சேர்ந்த உபைதீன் - அவ்வாப்பிள்ளை ஆகியோரின் மகனான அஸ்லம் அவர்கள் நாடளாவிய ரீதியலான இரண்டு போட்டிப் பரீட்சைகளிலும்(2017 – SLEAS, 2019 – SLAS)
 சித்தியுற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதோடு,
இவ்வருடம்  மட்டக்களப்பு  மாவட்டத்திலிருந்து  இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட  ஒரேயொரு முஸ்லிம் அதிகாரியாகவும் திகழ்கின்றார்.


1992இல் பிறந்த அஸ்லம் அவர்கள் ஆரம்ப மற்றும் உயர் கல்வியினை தனது சொந்த ஊரிலுள்ள மட்/  மம/ ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திலும், மட்/ மம/  அல் - அக்ஸா மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்று 2010 இல் தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகி முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் (B.Sc IN MIT)  முதலாவது பட்டத்தினை 2015இல் நிறைவு செய்தார். அத்தோடு 2013 இல் திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திற்கு தெரிவாகி இறுதியாண்டில் கல்வி கற்று வருகின்றார்.


வறுமைக்கு மத்தியிலும் பல சாதனைகளை படைத்துள்ள இவர் அரசாங்க சேவையில் 2015ம் ஆண்டில் போட்டிப் பரீட்சையொன்றில் சித்தியுற்று (ARPA) ஆக தெரிவாகி வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தில் கடமையாற்றியதோடு, 2017ம் ஆண்டு மிக இளவயதில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு  தெரிவாகி பயிற்சியின் பின்னர் பட்டிருப்பு கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக அர்ப்ணிப்புள்ள கல்விச் சேவையினை செய்து வருகின்றார்.


அத்தோடு இறைவனின் உதவியுடனும், அவரது முயற்சியினால் 2019ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவாகி காங்கேயனோடை கிராமத்திலிருந்து இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் இலங்கை நிர்வாக சேவை என்பவற்றுக்கு தெரிவான முதலாவது அதிகாரியாகவும் திகழ்கிறார்.


நற்பண்புகள் கொண்ட இவர் காங்கேயனோடை மினன் ஜும்ஆப் பள்ளிவாயலின் கௌரவ செயலாளராக 2012ம் ஆண்டு முதல் சேவையாற்றி வருவதோடு, 2015ம் ஆண்டு முதல் மட்/  மமஃ அல் - அக்ஸா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க கௌரவ செயலாளராகவும் சேவையாற்றி கிராமத்தின் கல்வி, சமூக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தகக்து.
காங்கேயனோடை அஸ்லம், நாடளாவியரீதியலான இரண்டு போட்டிப் பரீட்சைகளிலும் (SLAS, SLEAS) சித்தியுற்று வரலாற்று சாதனை . காங்கேயனோடை  அஸ்லம், நாடளாவியரீதியலான இரண்டு போட்டிப்  பரீட்சைகளிலும்  (SLAS, SLEAS)  சித்தியுற்று  வரலாற்று  சாதனை . Reviewed by Madawala News on February 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.