LICENCE இல்லா MICROSOFT உம், PRESCRIPTION இல்லா வலி நிவாரண மாத்திரைகளும் .


பொதுவாக கணனியில் சாதாரண சிறிய Software களே போலியான Crack License பாவிக்கும்போது உடனே
அதனை இனம்கண்டு மேற்கொண்டு பாவிக்க முடியாமல் செய்கிறது.


அப்படி இருக்க கணனியையே இயக்கும் Microsoft ஐ போலியான Crack License கொண்டு பாவிக்கக் கூடியதாக உள்ளது. அப்போது பலர் மனதில் எழுந்த கேள்வி தான் சாதாரண மென்பொருளே (software) போலியை உடனே கண்டுபிடிக்கும் போது ஏன் இவ்வளவு பெரிய Operating system கண்டுபிடிக்கவில்லையென்று.


 அங்குதான் Bill Gates இன் வியாபாரத் தந்திரம் இருக்கிறது. நம்மில் பலர் ஏதோ crack licence எடுத்து windows இல் install பன்னிவிட்டு Bill Gates க்கே தண்ணி காட்டி விட்டதாக நினைக்கிறோம். ஆனால் அவர் தான் எமக்குத் தண்ணி காட்டுகிறார். இங்கு தான் Bill Gates யின் வியாபார தந்திரத்தை உணரமுடிகிறது. அதாவது நான் ஏற்கனவே சொல்லிய சாதாரண சிறிய software போல் இந்த microsoft windows உம் போலியாக பாவிப்பவர்களை உடனே தடை செய்து இருந்தால் அவர்கள் எல்லோரும் அதனை வாங்க முடியாத நிலையிருப்பதால் அடுத்த தெரிவான Open source ஆன Linnux, Ubuntu போன்றவற்றுக்கு மாறியிருப்பார்கள்.


எனவே அதனைத் தடுத்து வைப்பதே இந்த வியாபாரத் தந்திரம். எனவே crack key களை பிடிக்க முடியாமல் அல்ல; அதனைப் பிடிக்கக் கூடாது என்பதுக்காகவே அவ்வாறு அவை விடப்படுகின்றன. ஆனால் பின்னர் windows update மூலமோ அல்லது வேறு virus களைப் பரப்பி உங்களுடைய windows ஐ update செய்யுங்கள் என்று சொல்வதன் மூலமோ Licence எடுக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

இதற்கும் வலிநிவாரணிகளுக்கும் என்ன சம்பந்தம்?

வலிநிவாரணிகளை எடுத்துக்கொண்டால் சாதாரணமாக Paracetamol எனும் பெனடோல் சகல சில்லரைக் கடைகளிளும் வாங்கக் கூடியதாக இருக்கும். அதேபோல் தான் ஒரு காலத்தில் பெனடீன் ( Paracetamol + Codeine) எனும் வலி நிவாரணியும் சகல சில்லரைக்கடைகளிளும் பெறக்கூடியதாக இருந்தது. பின்னர் Misuse காரணமாக சில்லறை கடைகளுக்கு Penadene தடை செய்யப்பட்டது.


பரசிட்டமோல் (Penadol) கூட தொடர்ந்து பாவிப்பது ஈரலைப் பாதிக்கும்.
இங்கே மனிதனுக்கு சாதாரண தலைவலி அல்லது கை கால் நோவு வரும் போது அவன் இந்த prescription தேவையில்லாத (OTC) மாத்திரைகளை நாடும் போது உடனடி நிவாரணம் கிடைக்கிறது. இதற்கு ஒரு படி மேலாக pharmacy களில் சென்று brufen, diclofenec (NSAIDS) போன்ற வலி நிவாரணிகளை இலகுவாக கேட்டு வாங்கும் நிலைமை உள்ளது. இவற்றால் உடனடியாக வலிநிவாரணம் கிடைப்பதால் மனிதன் இதற்கு அடிமையிகிறான். பலர் இதைவிட மேலும் power ஆன வலிநிவாரணிகளை பெறுவதற்கு வைத்தியரிடம் சென்று அவருடைய மருந்து சீட்டை பெறுகிறார்கள். பின்னர் அந்த மருந்து சீட்டை pharmacyகளில் கொடுத்து திரும்ப திரும்ப வாங்குகிறார்கள். ஒரு நிலையில் அதுவே பரீட்சயமாகி மருந்தின் பெயரைச் சொல்லியோ அல்லது அதன் Card ஐக் காட்டியோ வாங்க முடிகிறது.


ஆனால் இந்த வலிநிவாரணி மாத்திரைகளின் ஆபத்துக்கள் பற்றி தெளிவின்மையால் இது நடக்கிறது. உலக சுகாதார நிறுவனமே வாலி நிவாரணிகளை அதிகளவில் பாவிப்பது சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறது. பொதுவாக வலிநிவாரணிகள் gastritis எனப்படும் இரைப்பை அலட்சியையும், அதற்குமேலதிகமாக ஈரல் பாதிப்பையும் கடைசியில் சிறுநீரகப் பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.


எனவே காய்ச்சல் or அதிக வலி தரும் உடல் உபாதைகள் போன்ற தவிர்க்க முடியாத நிலைமைகளில் வைத்திய ஆலோசனையைப் பெற்று அதற்குரிய குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் வாலிநிவரணியைப் பாவித்து விட்டு நிறுத்த வேண்டும் . வலிநிவாரணிகளுக்கு அடிமையாதல் மிகப் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.


இதேநேரம் மேலைத்தேய நாடுகளில் வலி நிவாரணியாக Paracetamol/Acetaminophen ( எமக்கு தெரிந்த Panadol) மாத்திரமே வைத்தியரின் சிட்டை இன்றி பெறமுடியும். ஏனைய மாத்திரைகள் வைத்திய ஆலோசனை இன்றி விற்கவோ வாங்கவோ முடியாது.


எம்மைப் போன்ற கீழைத்தேய நாடுகளில் சர்வசாதாரணமாக மிகவும் Power (Potency) கூறிய வலி நிவாரணிகள் கூட எந்த ஒரு வைத்தியர் ஆலோசனையும் இன்றி pharmacy ஊடாக பெறக்கூடியதாக உள்ளது.
இலங்கை போன்ற நாடுகளில் போலி வைத்தியர்கள் அல்லது வேறு வைத்திய முறைகளை படித்து வைத்தியராக பதிவு செய்துவிட்டு ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்யும் நிறைய பேர் உள்ளனர்.


உண்மையில் தமது Clinic களுக்கு அதிக நோயாளிகளை வரச் செய்வதற்காக ஒரே Dose இல் (One Shot) நோயை குணப்படுத்த வேண்டி மிகவும் Power கூடிய வலி நிவாரண மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர். பொதுவாக அவற்றில் steroids எனப்படும் ஆபத்தான வலி நிவாரணிகளும் சர்வ சாதாரணமாக அடங்கும்.


மக்களும். ஒரே Dose இல் நோயை குணப்படுத்தும் இவர் சிறந்தவர் என்று சொல்லி அவரிடமே வாடிக்கக்கியாளராவதால் அது வியாபார தந்திரமாகவே மாறிவிட்டது.

காய்ச்சலின் போது கூட பரசிட்டமோலுக்கு (Panadol) மேலதிகமாக பரிந்துரை செய்யும் வலி நிவாரணிகளிலும் கவனம் அதிகம் வேண்டும். பொதுவாக டெங்கு காய்ச்சல் போன்ற நிலைமைகளின் போது வலி நிவாரணிகளான Brufen, Diclofenac என்பவை காய்ச்சலின் மூன்றாவது நாளுக்கு பின் பரிந்துரை செய்யப்பட்டால் உடலினுள் இரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணத்தை உண்டு பண்ணலாம்.


பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கு மருந்து எதுவும் இல்லை. உடலின் நீர் சமநிலையை பேணுவதே மரணத்திலிருந்து காப்பாற்றும். இதற்காகவே அடிக்கடி இரத்த பரிசோதனை மூலம் Platelets உம், சிறுநீரின் அளவு, குடிக்கும் நீரின் அளவு சோதிக்கப்படுகிறது.


இது புரியாமல் வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலுக்கு குளிசை தரவில்லை என அவசரமாக டிக்கெட் வெட்டி கொண்டு சென்று தனியார் பெட்டி கடைகளில் உடனடி வலிநிவாரணிகளை எடுத்து ஆபத்தை விலைக்கு வாங்குகின்றனர்.


இதேபோல் பெண்களைப் பொறுத்தவரையில் மாதவிடாய் நின்ற காலத்துக்கு பின் உடலில் மூட்டு வலிகள் ஏற்படுவது சாதாரணம் (Post Menopausal Symptoms). அதற்கென்று வலி நிவாரணிகளுக்கு அடிமையானால் வேறு நோய்களில் கொண்டு சேர்த்துவிடும். இலங்கையில் பொது வைத்தியசாலைகளில் (General Hospitals) OPD இரவு 8 மணிவரை இயங்குகிறது. அதில் மாலை 5 தொடக்கம் 6 மணியான நோயாளர் பார்வை நேரத்தில் OPD நோயாளர் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பை Registries காட்டுகின்றன.


அதற்கு முக்கியமான காரணம் ஏனைய நோயாளிகளை பார்வையிட வரும் பெண்கள் அப்படியே OPD க்கும் சென்று மூட்டுவலி என்று வலி நிவாரணிகளை பெயரைச் சொல்லியே கேட்கின்றனர். வைத்தியர்கள் மறுத்தால் அவர்களுக்கு எதிரான கருத்துகள் கோஷங்கள் அதிகரிக்கின்றன.Bitter Truth.

(Note:- இதேநேரம் Rheumatoid arthritis எனப்படும் மூட்டுவியாதி இருந்தால் அதற்குரிய இரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடித்து அதனை குணமாக்கும் அல்லது கட்டுப்படுத்தும் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். வெறுமனே வலி நிவாரணிகளை (NSAIDS) மாத்திரம் பாவிப்பது அந்நோயை மேலும் அதிகரிக்கச் செய்வதோடு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.)

பொதுவாக Fan இலோ AC யிலோ வாழ்ந்த ஒருவருக்கு Current Cut ஆனால் வாழ்க்கையே வெறுத்து போகும் அளவுக்கு உளைச்சல் ஏற்படும். அதேபோன்று Microsoft க்கு பழகிய ஒருவருக்கு அது அன்றி வேறொரு Operating System க்கு மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும்.
வலி நிவாரணிகளும் அதுபோன்றதே. எடுத்ததற்கெல்லாம் வலி நிவாரணியை பாவிக்க ஆரம்பித்தால் சாதாரண வலியை கூட பொறுத்துக் கொள்வது கடினமாக இருக்கும்.


எனவே அடிக்கடி வலி நிவாரணிகளை பாவிக்காமல் கட்டாயம் தேவையான நேரத்தில் மாத்திரம் தகுதிவாய்ந்த வைத்தியரின் ஆலோசனைப்படி பெற்றுக்கொள்வது ஏனைய பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாக்கும்.

எண்ணமும் எழுத்தும்.
Dr Ziyad AIA
MBBS, MSc, MD Health Informatics (PGIM)

Evidences:-
01, Use and abuse of over-the-counter analgesic agents.
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1188892/

02. Serious morbidity associated with misuse of over-the-counter codeine–ibuprofen analgesics: a series of 27 cases
https://www.mja.com.au/journal/2010/193/5/serious-morbidity-associated-misuse-over-counter-codeine-ibuprofen-analgesics

03. World Health Organization – Don’t Use Too Much Analgesics
https://campaignsoftheworld.com/print/world-health-organization-dont-use-much-analgesics/

04. Paracetamol in new health ALERT: Doctors warned over prescribing daily painkiller
https://www.express.co.uk/life-style/health/561502/Experts-warn-against-taking-paracetamol-daily

--
Dr. A.I.A.ZIYAD
MBBS (Peradeniya)
MSc - Biomedical Informatics (Colombo)
MD - Health Informatics (PGIM)
LICENCE இல்லா MICROSOFT உம், PRESCRIPTION இல்லா வலி நிவாரண மாத்திரைகளும் . LICENCE இல்லா MICROSOFT உம், PRESCRIPTION இல்லா வலி நிவாரண மாத்திரைகளும் . Reviewed by Madawala News on January 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.