ICC இன் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு. விராட் கோலிக்கு மூன்று உயரிய விருதுகள்.


ஐ.சி.சி யின் 2018 ஆண்டிற்கான சிறந்த நடுவராக குமார் தர்மசேன தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இந்த விருதை 2012 ஆம் ஆண்டும் இவர் பெற்றிருந்ததுடன் இவ்வாண்டு 2 ஆவது தடவையாகவும் சிறந்த நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் ஐசிசியின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் ஐசிசியின் சிறந்த வீரர் விருதையும் விராட் கோலியே தட்டிச்சென்றுள்ளார்.

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக விராட் கோலி இரண்டாவது முறையாகவும் இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒரே ஆண்டில் ஐசிசியின் மூன்று உயரிய விருதுகளை பெற்ற முதல் வீரர் விராட் கோலி காணப்படுகின்றார்.

சிறந்த இணை வீரராக கலம்மேக்லியோட் (ஸ்காட்லாந்து) தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், வளர்ந்து வரும் இளம் வீரராக ரிஷப் பாண்ட் (இந்தியா) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணியை பொருத்தவரை டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியும், ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதலிடத்திலிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒரு ஆண்டில் மிகச்சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஐசிசி கனவு அணி அறிவிக்கப்படுகிறது. இந்த அணியின் தலைவராக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஐசிசியின் கனவு டெஸ்ட் அணியில் இலங்கை வீரர் திமுத் கருணாரத்ன தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ICC இன் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு. விராட் கோலிக்கு மூன்று உயரிய விருதுகள். ICC இன்  சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு. விராட் கோலிக்கு மூன்று உயரிய விருதுகள். Reviewed by Madawala News on January 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.