1,080 மில்லியனுக்கும் அதிகமான ஹெரோய்ன் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க மற்றும் ஆப்கான் பிரஜைகள் கைது.


கொள்ளுப்பிட்டியில் இருந்து 90 கிலோகிராம் பெறுமதியான ஹெரோய்ன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குறித்த ஹெரோய்ன் போதைப் பொருளானது 1,080 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியை கொண்டுள்ளதோடு, இதுதொடர்பில் வெளிநாட்டவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் அமெரிக்க பிரஜைகள் இருவரும் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜையொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் ஒன்றிணைந்து குறித்த நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் இருவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த 29 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும் ஏனைய நபர் 41 வயதுடைய ஆப்கானிஸ்தாக எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் ஹிக்கடுவ பகுதியை சேர்ந்த 41 மற்றும் 39 வயதுடைய இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

1 கிலோ வீதம் 90 பெக்கட்டுகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
1,080 மில்லியனுக்கும் அதிகமான ஹெரோய்ன் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க மற்றும் ஆப்கான் பிரஜைகள் கைது. 1,080 மில்லியனுக்கும் அதிகமான ஹெரோய்ன்  கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க மற்றும் ஆப்கான் பிரஜைகள் கைது. Reviewed by Madawala News on January 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.