அரசாங்கத்துடன் இணையுமாறு தமிழ் கூட்டமைப்புக்கு சம்பிக்க அழைப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் அரசாங்கத்துடன் இணைய வேண்டும்.
அமைச்சுப் பதவிகளைப் பெற்று, வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு சேவையாற்ற முன்வர வேண்டுமென, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இன்று (11) அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று, புதிய அரசமைப்பு சம்பந்தமான யோசனையை முன்வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தமிழ்க் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் இணைவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு, எவ்வித அச்சுறுத்தலும் பாதிப்பும் ஏற்படப் போவதில்லையெனத் தெரிவித்த அவர், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆளுங்கட்சியில் அங்கம் வகித்ததால், மலையகத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு அச்சுறுத்தல் – பாதிப்பு ஏற்பட்டதா? இல்லையெனவும், அவர் கூறினார்.

அதேபோல், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக அங்கம் வகிப்பதால், முஸ்லிம் மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களில் எதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லையெனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், எனவே, எதிர்ப்பு அரசியலைக் கைவிடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்ப, அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டுமெனக் கோரினார்.

கடந்த 50 வருடங்களில், வடக்குப் பகுதியில் பெரிதாக எவ்விதத் தொழிற்சாலையும் உருவாகவில்லை என்றும் வேலையில்லாப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் சம்பிக்க, காலைநிலை மாற்றத்தால், இன்னும் 40ஆண்டுகளில் வடக்குப் பகுதி அரைப் பாலைவனமாக மாறக்கூடுமென்று எதிர்வு கூறியதோடு, அதைச் சமாளிப்பதற்குரிய வழிமுறைகள் பற்றியும் ஆராய வேண்டுமெனக் கூறினார்.

அரசாங்கத்துடன் இணையுமாறு தமிழ் கூட்டமைப்புக்கு சம்பிக்க அழைப்பு அரசாங்கத்துடன் இணையுமாறு தமிழ் கூட்டமைப்புக்கு  சம்பிக்க அழைப்பு Reviewed by Madawala News on January 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.