நாட்டுக்காக குரல் எழுப்பும் ஞானசாரவை விடுவியுங்கள் ; ஜனாதிபதியிடம் கோரிக்கை




நாட்­டுக்­காகக் குரல் கொடுக்கக் கூடி­ய­வர்­களே எங்­க­ளுக்குத் தேவை. அந்த வகையில் கல­கொட அத்தே
ஞான­சார தேரரை விடு­தலை செய்ய வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக “அரு­ணலு ஜனதா பெர­முன” அமைப்பின் தலைவர் டாக்டர் கிரிஷான் ராம சுந்­தரம் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் ஜனா­தி­ப­தி­யிடம் விடுத்­துள்ள கோரிக்கை வரு­மாறு:

ஜனா­தி­ப­தி­யிடம் மிகவும் பணி­வு­டனும் கரு­ணை­யு­டனும் கேட்­டுக்­கொள்­வது, இய­லு­மாயின் எங்கள் ஞான­சார ஹாமு­து­ருவை விடு­தலை செய்­யுங்கள். நீங்கள் சகல அதி­கா­ரங்­களும் பெற்­றுள்ள ஒரு ஜனா­தி­பதி. அதனால் உங்­களால் இதனை சாத்­தி­யப்­ப­டுத்­தலாம்.

எங்கள் ஹாமு­துரு, பெரிய தவ­றெ­துவும் செய்­ய­வில்லை அவர் இந்­நாட்­டுக்­கா­கவும் சிங்­க­ள­வர்­களைப் போன்றே தமிழ் மக்­க­ளுக்­கா­கவும் சிறு­பான்மை இனத்­திற்­கா­கவும் போரா­டி­யவர். யாழ்­பாணம், கொட்­டாஞ்­சேனை, வெள்­ள­வத்தை ஆகிய பிர­தே­சங்­களில் ஹிந்து பக்­தி­வான்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் எழுந்­த­போது, அவர் ஸ்தலத்­துக்குச் சென்று போராடி காப்­பாற்­றி­யுள்ளார். நான் அன்­னாரின் நண்­பனோ, தனிப்­பட்ட ரீதியில் ஆத­ர­வா­ளனோ அல்ல. ஆனாலும் அவ­ருக்கு நீதி­யொன்று வழங்­கப்பட் வேண்டும். அவர் கொலை போன்ற பெரிய தவறு எதுவும் இழைக்­க­வில்லை. அவர் நாட்­டுக்­கா­கவே கோஷம் எழுப்­பி­யுள்ளார். அதனால் ஆறு வரு­டங்கள் சிறை­வாசம் என்­பது அநீ­தி­யா­ன­தாகும்.

உங்­களை ஜனா­தி­ப­தி­யாக நிய­மிப்­ப­தற்­காக உமது அரு­ணலு ஜனதா பெர­முன கட்சி கூடிய அர்­ப்ப­ணிப்பு செய்­துள்­ளது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அமோக வெற்­றி­யீட்­டு­வ­தற்கு எங்கள் கட்சி மகத்­தான பங்­க­ளிப்புச் செய்­துள்­ளது. நாங்கள் உங்­க­ளிடம் வேறெ­துவும் கோரு­வ­தற்­கில்லை. முடி­யு­மானால் எங்கள் ஞான­சார ஹாமு­து­ருவை எங்­க­ளுக்கு விடு­தலை செய்து தாருங்கள். அவர் இந்­நாட்டில் இருக்க வேண்­டிய ஒருவர். சில வேளை அவர் சற்று கடுந்­தொ­னியில் உரைத்­தி­ருக்­கலாம் அதனைத் தவறு என்று நாம் காண­வில்லை.

மட்­டக்­க­ளப்பில் இந்து மக்­க­ளுக்­காக சிலை­யொன்று திறக்க முடி­யா­தி­ருந்த சந்­தர்ப்­பத்தில் ஞான­சார ஹாமு­துரு தலை­யிட்டு அதனைப் பெற்றுத்தந்ததாக தமிழ் இந்து பக்திவான்கள் கூறுகிறார்கள். யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் கூட ஞானசார தேரர் தொடர்பாக தவறான கருத்துக்கள் ஏதும் இல்லை அவர் சரியானவர் என்றே அவர்கள் கூறுகிறார்கள்.
-Vidivelli
நாட்டுக்காக குரல் எழுப்பும் ஞானசாரவை விடுவியுங்கள் ; ஜனாதிபதியிடம் கோரிக்கை நாட்டுக்காக குரல் எழுப்பும் ஞானசாரவை விடுவியுங்கள் ; ஜனாதிபதியிடம் கோரிக்கை Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.