உணவு வகைகளை கையால் தொட்டு விற்பனை செய்யத் தடை.


( ஐ. ஏ. காதிர் கான் )
சகல விதமான உணவு வகைகளையும்,  கையினால் தொட்டு விற்பனை செய்யும் நடவடிக்கைகள்,
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


    இந்த நடைமுறையை மீறிச் செயற்படும் உணவக மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.    இது குறித்து,  மக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும், சுகாதார அமைச்சு மேலும்  தெரிவித்துள்ளது.


   மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு இது தொடர்பிலான  தெளிவூட்டல் வழிகாட்டல்  அறிக்கைகள், நேற்று முன் தினம் சுகாதார அமைச்சினால்  வழங்கப்பட்டது.

( ஐ. ஏ. காதிர் கான் )
உணவு வகைகளை கையால் தொட்டு விற்பனை செய்யத் தடை.  உணவு வகைகளை கையால் தொட்டு விற்பனை செய்யத் தடை. Reviewed by Madawala News on January 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.