மைத்திரிபால சிறிசேனவின் அந்த 7 நாட்களுக்கு என்ன நடந்தது ?


ஆட்சியாளர்கள் அற்ற நாடாக இலங்கை இருப்பதை ஜனநாயகத்தின் உயர் அதிகாரங்கள் தொடர்ந்தும்
அனுமதிக்கப்போன்றனவா எனத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர்  அஹமட், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அந்த 7 நாட்களுக்கு என்ன நடந்த  எனவும் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைக்கு நீதிமன்றத் தீர்ப்பு மாத்திரம் நிரந்தரமான தீர்வைத் தரும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாவிடினும் நிலைமையை சுமூகமாக்க இது உதவும் என நம்பலாம்.

எனினும் இத்தீர்ப்பு காலதாமதமாவது நாட்டின் ஆட்சி அதிகார - நிர்வாக நடைமுறைகளில் மேன்மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தச் செய்யும். இதனால் பொது மக்களே பெரிதும் பாதிப்படைவர்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு 7 நாட்களுக்குள் தீர்வு தருவேன் என்ற ஜனாதிபதியின் உத்தரவாதமும் புஸ்வானம் ஆகிவிட்டது. நாட்டில் எடுத்ததற்கெல்லாம் நீதிமன்றத்தை நாடுகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவேஆரோக்கியமற்ற இத்தகைய நிலைமைகள் தொடர்ந்து நீடிப்பதை தவிர்த்து, விட்டுக் கொடுப்புகள் ஊடாகத் தீர்க்கமான ஒரு முடிவை எட்டி அதற்கான வழி நடத்தல்களை மேற்கொள்ள அனைத்து அரசியல் தரப்புகளும் முன்வரவேண்டும்.

நல்லாட்சி அரசுக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணை நிர்கதியாகியுள்ளது. எனவே மக்களின் மீளாணை என்னவென்பதை மீண்டும் அறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான சுமூகநிலையை ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுப்பது மக்கள் ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைவரதும் தார்மீக கடமையாகும்.

தேக்கமுற்றுள்ள நிர்வாக நடைமுறைகள் காரணமாக நாளாந்தம் தேசிய பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. இது எமது சர்வதேச பொருளாதார மட்டத்திலும் பெரும் பாதகத்தை எற்படுத்தி வருகின்றது. இதனால் மாகாண- மாவட்ட மட்டங்களில் அபிவிருத்தி பணிகளில் தேக்க நிலைமைகள் எற்பட்டுள்ளன இதனால் பொதுமக்களே தொடர்ந்தும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். ஆகவே தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் துரிதமாக மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மைத்திரிபால சிறிசேனவின் அந்த 7 நாட்களுக்கு என்ன நடந்தது ? மைத்திரிபால சிறிசேனவின் அந்த 7 நாட்களுக்கு என்ன நடந்தது ? Reviewed by Madawala News on December 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.