ரணிலுக்கு 101 அல்லது 122 என்பது தெளிவாகும் நேரம் வரப்போகிறது...!




எதிர்வரும் 12ம் திகதி ரணிலை பிரதமராக்குவதற்கான வாக்கெடுப்பு நடைபெறப்போகின்றதாம்..
இந்த வாக்கெடுப்பில்தான் ரணிலின் சாயம் வெழுக்கப்போகின்றதா? அல்லது மஹிந்தவின் சாயம் வெழுக்கப்போகின்றதா? என்பது தெளிவாகப்போகின்றது எனலாம்.

இந்ந வாக்கெடுப்புக்கு ஜே.வி.பி ஆதரவு கொடுக்கமாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள். அதே நேரம் இந்த வாக்கெடுப்பில் த.தே.கூட்டமைப்பு கலந்து கொள்ளுவதா என்பதில் இதுவரை கட்சிக்குள் முடிவு எட்டப்படவில்லை, இதனால் கட்சிக்குள் இழுபறி நிலையே காணப்படுகின்றது.

ஒருவேளை த.சே.கூட்டமைப்பு வாக்களிக்காது விட்டால் ரணிலின் சாயம் வெழுத்து விடுவதோடு, மஹிந்தவைப்போல் தனக்கும் அறுதிப்பெரும்பாண்மை இல்லையென்பது வெட்டவெளிச்சமாகிவிடும். இப்படியொரு நிலையேற்பட்டால் ரணிலுக்காக பாடுபட்ட வெளிநாட்டு ஏஜண்டுகள் தொடக்கம் உள்நாட்டில் உள்ள சகல ஏஜண்டுகளின் முகத்திலும் கரியை பூசிய நிலைதான் ஏற்படும்.

இப்படியான நிலைகளை கருத்தில் கொண்டு த.சே.கூட்டமைப்பினர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்து ரணிலைப் பிரதமராக்கும் முயற்சி வெற்றியளித்தால், ஐ.தே.கட்சியும் + த.தே.கூட்டமைப்பும் சேர்ந்த ஆட்சியென்றே அந்த ஆட்சி கருதப்படும். இதனால் த.தே.கூட்டமைப்பு எதிர்க்கட்சி பதவியை விட்டெறிந்துவிட்டு ஆளும் கட்சியில் போய் அமரவேண்டிய நிலையும் ஏற்படும்.

அப்படியொரு நிலையேற்பட்டால், அந்த நிலை ஏற்பட்ட நேரத்திலிருந்தே ஐ.தே.கட்சியினதும், த.தே.கூட்டமைப்பு கட்சியினதும் அழிவு காலம் ஆரம்பமாகிவிடும்.  அதற்கான பின் விளைவுகள் இரு கட்சிகளுக்கும் படுமோசமானதாகவே அமையும். இதன் காரணத்தை அறிந்து கொண்ட த.தே.கூட்டமைப்பினர் இந்த விசப்பரீட்சைக்கு இனங்கமாட்டார்கள் என்பதே உண்மை.

ஆகவே எதிர்வரும் 12ம் திகதி யாருடைய சாயம் வெழுக்கப்போகின்றது என்பதை கானும் நாளாகும் என்பதுதான் உண்மையாகும்.
பொருத்திருந்து பார்ப்போம்...!

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை...
ரணிலுக்கு 101 அல்லது 122 என்பது தெளிவாகும் நேரம் வரப்போகிறது...! ரணிலுக்கு 101 அல்லது 122 என்பது தெளிவாகும் நேரம் வரப்போகிறது...! Reviewed by Madawala News on December 08, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.