இலங்கையில் போதை வஸ்து பாவனை திடுக்கிடும் உத்தியோகபூர்வ புள்ளி விபரம்.

 -By Dr A.I.A.Ziyad -
2018 April , May மாத புள்ளிவிபரங்களின் படி:-
போதைப்பொருள் பாவனை தொடர்பாக கைதானவர்களில் 79.8% சிங்களவர், 8.7% முஸ்லிம், 8.4% தமிழர் அடங்குவர்.
97% ஆனவர்கள் ஆண்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் 61.8% ஆனோர் 20-34  வயதுக்குட்பட்டோர் அடங்குவர்.
நால்வர் 15 வயதுக்கு உட்பட்டோர்.
கைதானவர்களில் 3%  பாடசாலை செல்லாதவர்கள், 40.6% ஆனோர் O/L கல்வி பூர்த்தி செய்யாதோர். 9% ஆனோர் A/L கல்வியை பூர்த்தி செய்தவர்கள்.
 
2016 ஆண்டு இலங்கையில் போதைப் பொருட்கள் சம்பந்தமான குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,378 ஆவதோடு, இவர்களில் 35% வீதம் ஹெரோயீனை வைத்திருந்ததற்காகவும், 60% வீதமானோர் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டனர். மேலும் பெரும்பான்மைக் குற்றச் செயல்கள் மேல் மாகாணத்தில் (60%) பதிவாகியது. 


அதைத் தொடர்ந்து, தென் மாகாணத்தில் 9%, மத்திய மாகாணத்தில் 10% என்ற வீதங்களில் காணப்பட்டன. மாவட்ட அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 43%, கம்பஹா மாவட்டத்தில் 13%, மற்றும் குருனாகல் மாவட்டத்தில் 4% என்ற வீதங்களில் காணப்பட்டன. 2016 ஆண்டில் போதை வஸ்துக்கள் தொடர்பான குற்றச்செயல்களுக்கு கைதானவர்களிைன் வீதம் மொத்த ஜனத் தொகையுடன் ஒப்பிடுகையில் ஒரு இலட்சம் பேருக்கு 390 என்ற அளவில் காணப்பட்டது.






































கஞ்சா
கஞ்சா என்பது சட்டரீதியாகாத ஒரு அபாயகரமான ஒளடதமாவதோடு இது உலர் வலையத்தில், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பயிரிடப்படுகின்றது. அன்னளவாக 500 ஹெக்டெயார் பூமிப்பரப்பில் கஞ்சா பயிரிடப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பயிர்களுடன்
கடத்துவது தொடர்பான குற்றங்களுக்கு கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது புலனாகியது.

2016 ஆண்டில் சுற்றிவளைப்புக்கள் மூலம் மொத்தம் 4174 கிலோ கிறோம் கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பான கைதுகள் மேல் மாகாணத்தில் 51%, தென் மாகாணத்தில் 10% மத்திய மாகாணத்தில் 9% மற்றும் வடமேல் மாகாணத்தில் 8% என பதிவாகியது.

2016 கணிப்பின்படி மக்கள் தொகையில் ஒரு இலட்சம் பேருக்கு 235 நபர்கள் என்ற வீதத்தில் இக்குற்றச் செயலுக்கு கைதாகியுள்ளனர். கஞ்சா பாவனை நம் நாட்டில் பாரியதொரு பிரச்சினையாக பரவி வருகின்றது. அதை நுகர்வோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றது.

இதே வேளை, கஞ்சாவில் உள்ள போதை தரும் விஷ உள்ளடக்கங்களை நீக்கி, அதை ஆயுர்வேத மருத்துவ தேவைகளுக்காகவும் பயன் படுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் இவ்வடிப்படை மருந்து வகைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கஞ்சாவை பயன் படுத்துபவர்களில் சட்ட ரீதியானவர்கள் ஆவர். இவ்வகையில், 2016 ஆண்டு மருத்துவத் தேவைகளுக்காக 332.54 கிலோ கிறேம் கஞ்சா பயன் படுத்தப்பட்டது. 2015 ஆண்டில் இலங்கை ஆயுர்வேத ஒளடதங்கள் கூட்டுத்தாபனம் 129,8 கிலோ கிறோம் கஞ்சாவை பயன் படுத்தி மதன மோதகய மற்றும் காமேஷ்வரீ மோதகய என்ற மருந்துவகைகளவை உற்பத்தி செய்தது.

.

ஹெரோயின்
1970 ஆண்டிட்கு முன் வரை ஹெரோயின் நுகர்வு பற்றி தெரிய வரவில்லை. வெளிநாட்டு உல்லாசப் பயணத்துறையின் வளர்சச்சியுடன் இப்பழக்கம் தொடர்பாகியிருப்பது புலனாகியுள்ளது. அதாவது வெளிநாட்டவரே ஹெரொயின் பழக்கத்தை இங்கு அறிமுகம் செய்துள்ளனர். 1980 களின் பின் ஹெரோயின் நுகர்வு முதலில் நகர் புறங்களில் ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து இது ஒரு சமூகப் பிரச்சினையாக வளர்ச்ச அடைந்து ஹெரோயின் பயன் படுத்துபவர்களை கைது செய்வது ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் ஹெரோயின் கொழும்பு உற்பட்ட ஏனைய நகர்புறங்களில் மாத்திரம் காணப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து கிராமப் புறங்களுக்கும் பரவ ஆரம்பித்ததோடு இது ஒரு பாரிய பிரச்சினையாக பூதாகார வளர்ச்சி கண்டது.

ஹெரோயினுக்காக கைதானவர்களில் பெரும்பாலானோர், ஹெரொயினை சொந்தப் பாவனைக்கு சிறிதளவு வைத்திருந்தவர்களே ஆவர். இலங்கையில் தற்போது சுமார் 45,000 பேர் ஹெரோயின் நுகர்வதாக மதிப்பிடுப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வருடாந்தம் வீதி மட்டத்தில் 1478 கிலோ கிறேம் விற்பனையாகின்றது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது, நாள் ஒன்றிற்கு 4 கிலோ கிறேமாகும். இலங்கைக்கு கடத்தப்படும் ஹெரோயினில் அதிகமானவை மீன்பிடி படகுகள் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் இருந்தே பிரதானமாக கடத்தப்படுகின்றது. தென் இந்தியா ஊடாக மீண்பிடி படகுகள் மூலமும் வேறு சில வழிகளிலும் போதை வஸ்து மேற்கு கரையோரப் பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றமை புலனாகியுள்ளது.

2016 ஆண்டு ஹெரோயின் கடத்திய குற்றத்திற்காக 27,462 பேர் கைதானதோடு, இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயினின் மொத்த எடை 206 கிலோ கிறேமாகும். 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆண்டில் ஹெரோயின் தொடர்பான கைதுகள் 3 % அதிகரித்துள்ளது. இந்த அடிப்படையில், 2016 ஆண்டு ஹெரோயின் தொடர்பான கைதுகளின் ஒப்பீடு ஒரு இலட்சம் பிரஜைகளுக்கு 135 நபர்கள் என்ற வீதத்தில் காணப்பட்டது.

ஹெரோயின் சராசரி தூய்மை மட்டங்கள் (டை எசிடயில் மோர்ஃபீன் வீதம்)

2016 ஆண்டில் இலங்கையில் காணப்பட்ட ஹெரோயினில் இருந்த டய்எஸிடயில் மோஃபைனின் பெருமானம் 17.87 % ஆக இருந்ததோடு, இது 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16 % அதிகரிப்பாகும். பொதுவாக ஹெரோயினில் கலப்படம் செய்யும் பொருட்களாக டய்சிஃபேம், எசிடமினோஃபின், கெஃபேன் போன்றவை பயன் படுத்தப்படுகின்றன. வீதி மட்டத்தில் விற்பனை செய்யப்படும் ஹெரோயினின் மாதிரிகளை அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தேசிய போதைப் பொருள் இரசாயன ஆய்வு கூடங்களில் பகுப்பாய்வு செய்யப்படும்.

அபின்
தற்சமயம் அபின் துஷ்பிரயோகம் செய்யப்படுவது இலங்கையில் புலனாகவில்லை. பொதுவாக அபின் மருத்துவத் தேவைகளுக்காக மட்டுமே பயன் படுத்தப்படுகின்றது. மருத்துவத் தேவைகளுக்கான அபினை ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் அது தொடர்பான நிறுவனங்களுக்கும் அரச மருத்துவமணைகள் ஊடாக சுகாதார அமைச்சு விநியோகித்து வருகின்றது. 2016 ஆண்டில் அபின் தொடர்பான குற்றங்களுக்காக 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வீதி மட்டத்தில் விற்பனையாகும் போதை வஸ்துகக்ளின் சராசரி விலைகள்

2016 ஆண்டு விற்பனை செய்யப்பட்ட ஹெரோயினின் ஒரு கிலோவின் வீதி விலை இலங்கை ரூபாய் 9 மில்லியனாக இருந்தது. இது அமெரிக்க டொலர் 58,705 இட்கு சமமாவதோடு 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 13 % அதிகரிப்பாகும். அதாவது 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ரூ. 8 மில்லியனில் இருந்து 9 மில்லியனாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கிறோம் கஞ்சாவின் பொதுவான வீதி விலை சுமார் ரூ. 22,000 (134.5 டொலர்) என இருந்தது. இதே சமயம் 2016 ஆண்டு அபின் ஒரு கிலோவின் விலை ரூ. 1.5 மில்லியனாக (9784 டொலர்) இருந்தது.

 

நடத்தையில் மாற்றம் ஏற்படுத்தும் பொருட்களை துஷ்பிரயோகம் செய்தல்

இது போன்ற போதை வஸ்துக்களை நுகர்வது தற்போது இலங்கையில் பாரியதொரு பிரச்சினையாக மாறி வருகின்றது. மருத்துவத் தேவைகளுக்காகவும், ஹெரோயினை பெற முடியாத தட்டுப்பாடு நிலைகள் ஏற்படும் போதும் போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்கள் இவற்றை உட்கொள்வதுண்டு. மருத்துவரின் மருந்து சீட்டின்றி இவற்றை விற்பனை செய்வது சட்ட விரோதமான செயலாக இருப்பினும் சந்தையில் இவற்றை பெறுவது சிரமமான விடயமாக இல்லை. 


2016 ம் ஆண்டில் நடத்தையில் மாற்றம் ஏற்படுத்தும் மருந்து வகைகளை துஷ்பிரயோகம் செய்யும் போக்கு பரவலாகக் காணக்க கூடியதாக இருந்தது. குறிப்பாக மேல் மாகாணத்தில் இப்பழக்கம் அதிகமாக காணப்படுகின்றது. 2016 ம் ஆண்டில் மருந்து வகைகளை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுசபை மூலம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது சட்டவிரோதமாக ட்ரெமடோல் (Tramadol) வைத்திருக்கும் பல சம்பவங்கள் புலனாகியது. வெளிநாட்டு நபர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டதுடன் அதிகமான கைதுகள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே பதிவாகியது.

போதைப் பொருட்களை கடத்தல்

போதைப் பொருட்கள் கடத்தலின்போது கைப்பற்றபப்டும் அவற்றின் எடைகள் கடத்தல்களுக்கான ஒரு அளவு கோளாக கருதப்படுகின்றது. போதைப் பொருட்கள் கடத்தலில் இலங்கை ஒரு முக்கிய கேந்திரஸ்தானமாக ஆகியுள்ளதுடன், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இருந்து கடத்தல் மூலம் கொண்டு வரப்படும் போதை வஸ்துக்கள் கொழும்பு மற்றும் மாலே ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றது. கடந்த 5 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட கைப்பற்றல் மற்றும் விசாரனைகள் தொடர்பான தகவல்களின்படி தென் மேற்காசியாவின் பிரபல ஹெரோயின் வகையாகிய ‘பிறவுன் ஷகர்’ பிரதானமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு கடத்தப்படுகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 186 வெளிநாட்டு நபர்கள் போதை வஸ்த்துக்களை கடத்த முயற்சிக்கையில் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 58 இந்தியர்கள் உட்படுவர். 2016 ம் ஆண்டில் இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் வைத்து போதை வஸ்துக்களை கடத்த முயற்சித்த 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு சேவைகள்

போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீட்சி பெறுவதற்காக அரச அமைப்புகளும் அரச சார்பற்ற அமைப்புகளும் சேவைகள் பல வழங்கி வருகின்றன. போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து விடுபட சிகிச்சை பெறுவதை கட்டாயமாக்கும் சட்டமூலம் ஒன்று ‘இலக்கம் 54 2007 ம் ஆண்டு – சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு’ என்ற பெயரில் இயற்றுபட்டது. அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை இது போன்ற 4 வதிவிட வசதியுள்ள நிலையங்களை நடாத்தி வருவதுடன், வெளியிட சேவைகளையும் வழங்கி வருகின்றது. இந்நிலையங்கள் கொழும்பு (தலங்கம்), கண்டி, காலி, மற்றும் ஊராபொல (நிட்டம்புவ) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுடன், போதை தடுப்பு மற்றும் வெளியக செவைகளையும் சபை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையங்களில் உளவள சிகிச்சை, குடும்ப ஆலோசனை சேவை, விஷ நீக்கம், உடற்பயிற்சி, மனத்தளர்ச்சிக்கான சிகிச்சை, உட்புற மற்றும் வெளிப்புற செயற்பாடுகள், உளநோய் சிகிச்சை, சுகாதாரமான வாழ்வு முறைக்கான கல்வி, ஊக்கமுண்டாக்குதல், ஆற்றல் அபிவிருத்தி போன்ற செயற்திட்டங்கள் இம்மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

2016 ஆண்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான 2355 நபர்களுக்கு புணர்வாழ்வு சேவைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 826 (35%) பேர் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மூலமும், 684 (29%) பேர் சிறைச்சாலை திணைக்கள் புணர்வாழ்வு திட்டங்கள் ஊடாகவும், 474 பேர் (20%) அரச சார்பற்ற அமைப்புக்களின் முன்னெடுப்புக்கள் மூலமாகவும், 371 பேர் (16%) கந்தக்காடு சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு நிலையத்திலும் (புணர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம்) புணர்வாழ்வளிக்கப்பட்டனர். பயனாளிகளில் அதி கூடியவர்கள் (51%) கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவதோடு இவர்களில் 62% நபர்களின் வயதெல்லை 30 மற்றும் அதை விட அதிகமாகக் காணப்பட்டது. 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆண்டில் சிகிச்சைக்காக ஆர்வம் காட்டுபவர்களின் சதவீதம் 59% ஆல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சிறைத் தண்டனை

2016 ஆண்டு போதை வஸ்து குற்றங்களுக்காக 24,060 நபர்கள் சிறைத் தண்டனை பெற்றனர். இவர்களில் 10,535 பேர் விஷ போதை வஸ்துக்களை உட்கொண்ட குற்றத்திற்காகவே தண்டனை பெற்றனர். இது மொத்த சிறைப்படுத்தல்களில் 44 % ஆகும். 2016 ம் ஆண்டில் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்கு 2739 (26%) நபர்களும், ஹெரோயின் தொடர்பான குற்றங்களுக்காக 7783 (74%) நபர்களும் சிறைத் தண்டனை பெற்றனர். போதை வஸ்துக்கள் தொடர்பான குற்றங்களுக் சிறையில் இடப்படுபவர்களின் வீதம் 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆண்டில் 6% குறைவடைந்துள்ளது.

 
சட்டத்தை அமுல்படுத்துவது

2016 ஆண்டு இலங்கை போலிஸ் திணைக்களம், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (PNB), மதுவரித் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புப் பிரிவு, இலங்கை சுங்கத் திணைக்களம், முப்படை போன்ற அரச நிறுவனங்கள் போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இதற்காகவும் போதை ஒழிப்பு தொடர்பான புதிய சட்டங்களை இயற்றுவதற்கும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உப குழு இதற்கான தொடர்பாடலை சம்பந்தப்பட்ட சகல அரச நிறுவனங்களுக்கும் வழங்கி வருகின்றது. இதே வேளை, சபையுடன் இணைந்து போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான புணர்வாழ்வுத் திட்டங்களை சிறைச்சாலைத் திணைக்களம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு சேவைகள்:-

போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீட்சி பெறுவதற்காக அரச அமைப்புகளும் அரச சார்பற்ற அமைப்புகளும் சேவைகள் பல வழங்கி வருகின்றன. போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து விடுபட சிகிச்சை பெறுவதை கட்டாயமாக்கும் சட்டமூலம் ஒன்று ‘இலக்கம் 54 2007 ம் ஆண்டு – சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு’ என்ற பெயரில் இயற்றுபட்டது. அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை இது போன்ற 4 வதிவிட வசதியுள்ள நிலையங்களை நடாத்தி வருவதுடன், வெளியிட சேவைகளையும் வழங்கி வருகின்றது. இந்நிலையங்கள் கொழும்பு (தலங்கம), கண்டி, காலி, மற்றும் ஊராபொல (நிட்டம்புவ) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுடன், போதை தடுப்பு மற்றும் வெளியக செவைகளையும் சபை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையங்களில் உளவள் சிகிச்சை, குடும்ப ஆலோசனை சேவை, விஷ நீக்கம், உடற்பயிற்சி, மனத்தளர்ச்சிக்கான சிகிச்சை, உட்புற மற்றும் வெளிப்புற செயற்பாடுகள், உளநோய் சிகிச்சை, சுகாதாரமான வாழ்வு முறைக்கான கல்வி, ஊக்கமுண்டாக்குதல், ஆற்றல் அபிவிருத்தி போன்ற செயற்திட்டங்கள் இம்மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

2016 ஆண்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான 2355 நபர்களுக்கு புணர்வாழ்வு சேவைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 826 (35%) பேர் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மூலமும், 684 (29%) பேர் சிறைச்சாலை திணைக்கள் புணர்வாழ்வு திட்டங்கள் ஊடாகவும், 474 பேர் (20%) அரச சார்பற்ற அமைப்புக்களின் முன்னெடுப்புக்கள் மூலமாகவும், 371 பேர் (16%) கந்தக்காடு சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு நிலையத்திலும் (புணர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம்) புணர்வாழ்வளிக்கப்பட்டனர். பயனாளிகளில் அதி கூடியவர்கள் (51%) கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவதோடு இவர்களில் 62% நபர்களின் வயதெல்லை 30 மற்றும் அதை விட அதிகமாகக் காணப்பட்டது



(Sources:- http://www.nddcb.gov.lk/ )


By Dr A.I.A.Ziyad
MBBS, MSc, Registrar MD Health Informatics,
Information Unit,
Ministry of Health.
இலங்கையில் போதை வஸ்து பாவனை திடுக்கிடும் உத்தியோகபூர்வ புள்ளி விபரம். இலங்கையில் போதை வஸ்து பாவனை திடுக்கிடும் உத்தியோகபூர்வ புள்ளி விபரம். Reviewed by Madawala News on December 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.