பெண் ஒருவரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய இலங்கையருக்கு தென்கொரியாவின் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது.


தென்கொரியாவில் 90 வயதான பெண் ஒருவரை தீ விபத்தொன்றில் இருந்து காப்பாற்றிய இலங்கையருக்கு
அந்த நாட்டின் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இன்று அவருக்கான உத்தியோகப்பூர்வ குடியுரிமை சான்றிதழ் அந்த நாட்டின் குடிவரவு திணைக்களத்தினால் வழங்கப்பட்டதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவின் வடக்கு கயங்சாங் மாகாணத்தில் தொழில்புரிந்துவந்த குறித்த இலங்கையர், அங்குள்ள கட்டிடம் ன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இருந்து 90 வயதான முதும் பெண் ஒருவரை காப்பாற்றினார்.

இதனை அடுத்து பாராட்டுகளைப் பெற்ற அவர் தொடர்பில் கடந்த வாரம் அந்த நாட்டின் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு, அவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
பெண் ஒருவரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய இலங்கையருக்கு தென்கொரியாவின் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. பெண் ஒருவரை தீ விபத்தில்  இருந்து காப்பாற்றிய இலங்கையருக்கு தென்கொரியாவின்  நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. Reviewed by Madawala News on December 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.