ஊடக இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்ற கெஹலிய ரம்புக்கல, முஸ்லிம்களிடம் ஆற்றிய தெளிவுபடுத்தல் உரை.


நாட்டினுடைய பிரஜைகளாவர். இந்த நாடு பற்றி  பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு  எல்லோருக்கும் இருக்கிறது.
சந்தப்பவாத அரசியல் காரணமாக ஒவ்வொரு இனத்தையும் பிரித்து அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல் என்பது மிகவும் பரிசுத்தமான அரசியலாக இருக்க வேண்டும். உண்மைத் தன்மையுடையதாக இருக்க வேண்டும்.  அரசிலை பெறுமதிமிக்கதாக பார்க்க வேண்டும். எனினும் தம்முடைய சந்தர்ப்பவாத   அரசியலை அதிகரிப்பதற்கான அரசியலைச்  செய்யக கூடாது.

உண்மைக்கு உண்மையான தூய்மான அரசியலை  எமது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருகிறார் என்று கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் ஊடக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்கல தெரிவித்தார்.


கலகெதரை தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் கட்சிக் கொள்கை விளக்கக் கூட்டம்   தெஹிதெனிமடிகே என்ற இடத்தில் சமீபத்தில் இடம்பெற்றது .


அதில் கலந்து கொண்ட கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் ஊடக இராஜாங்க கெஹலிய ரம்புக்கல இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

ஒவ்வொரு மனிதனும் இந்த நாட்டின்  பிரஜை உடையவராவார். இந்த நாட்டின் பிரஜையுடையவராக இருந்தால் தங்களுடைய சம்பிரதாய கலாசார விழுமியங்களுடன் மனிதன் வாழ வேண்டும்.   எல்லா வகையிலும் இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் இந்த நாட்டின் எதிர்காலம் எவ்;வாறு முன்னெடுக்கப்படுகிறது  என்று பொறுப்புக் கூற வேண்டியவர்களாக  இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளும் இருத்தல் வேண்டும்.


 இந்த நாட்டின் எதிர்காலம்  குறித்து சகல இன மக்களும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் உரித்துடையவர்கள். இதை நாங்கள் நிலை நிறுத்த முடியும் என்றால் இந்த நாட்டை சரியாக கட்டி எழுப்ப முடியும்.


வெட்டினாலும் பச்சை, வெட்டினாலும் நீலம் என்று சென்றால் இந்த நாட்டில் வாழ்வது எவ்வாறு? எமது அடுத்த தலைமுறையினருக்கு இந்த நாட்டை எவ்வாறு ஒப்படைப்பது ? என்பது பற்றி தேவையை உடையவர்களே உள்ளனர் என்று நான் நம்புகின்றேன்.


எஸ் டப்லியூ பண்டார நாயக்கவின் ஆட்சிக்குப் பின்னர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவின் ஆட்சிக் காலத்தில் இந்த நாட்டின் முஸ்லிம் பிரஜைகள் மிகுந்த நெருக்கத்துடன் இருந்தனர்.  அந்தவகையில் கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத், ஹலீம் இசாக் உள்ளிட்டவகளைக் குறிப்பிடலாம். இந்தப் பிரபல்யமான நாட்டை நேசிக்கக் கூடிய தலைவர்கள் இருந்தார்கள்.


 ஸ்ரீமாவோ பண்டார நாயக்க அவர்கள் தொடர்ந்து இன்னும்  ஐந்து வருடங்கள் ஆட்சி செய்திருப்பாராயின் ஆசியாவின் சிறந்த நாடாக இலங்கை விளங்கி இருக்கும் என்று கருதுகின்றேன்.


இந்த நாட்டில் சிறந்த அறிவு ஞானத்துடன் வியாபாரம் செய்யும் முஸ்லிம் வர்த்தர்கள் இருந்தார்கள். ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவின் ஸ்ரீல்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து இந்த நாட்டை கட்டி எழுப்பக் கூடிய சக்தி மிக்க முஸ்லிம்கள் இருந்தார்கள். அவருக்குப் பிற்பாடு  ஜே. ஆர் ஜயவர்தனவின் காலத்தில் தாராள பொருளாதாரக் கொள்கை மாற்றம் வந்தது.


இந்தக் காலத்தில் சுதந்திர பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப முஸ்லிம் தலைவர்களும் தோன்றினார்கள். ஏனைய கட்சிகளில் யாரும் இருக்க வில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் செல்லக் கூடிய தலைவர்கள்  கட்சியுடன் தொடர்பு பட்டிருந்தார்கள்.


கடந்த கால அரசியலை பின்னோக்கிப் பார்த்தால் மஹிந்த ராஜபக்ஷவின் வரலாறு பொதுவாக முஸ்லிம்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த வரலாறாகவே பார்க்க வேண்டியிருகிறது.


2008 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் நூற்றுக்கு 25 விகிதமான மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களித்தனர், இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில்  மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தார். வடக்கு கிழக்கு தனி ராச்சியம் இருந்தது. அங்கு இருந்தவர்களும் எங்களுடைய மக்கள். அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் அரபு பேசவில்லை. தமிழ்தான் பேசினார்கள், அவர்களை 24 மணி நேரத்திற்குள் அங்கு இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.  அதனை நாங்கள் மறக்கக் கூடாது.


ஒரு வரலாறு இருக்கிறது. கத்தான்குடி, ஏறாவூர் பற்றிப் பேசும் மனட்சாட்சிக்கு விரோதமாகச் செயற்பட முடியாது. இந்த நிலையில் இருந்து பாதுகாப்பு வழங்கிய மஹிந்த ராஜபக்ஷவை நீங்கள் மறக்கக் கூடாது. 2010 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் ஆதரவு மாற்றம் ஏற்பட்டு முஸ்லிம்களுடைய ஆதரவு அதிகரித்தது.


2015 ஆம் ஆண்டு ஞாபகத்தில் கொள்ள வேண்டியது அதுதான். இந்த நாடடிலுள்ள சிறு தொகையினர் பிரச்சினையை ஏற்படுத்தினர். இந்த 2013. 2014 ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் பாரிய பிரச்சினை இருந்தது. அதுதான் ஹலால் பிரச்சினையாகும்.


இந்த ஹலால் பிரச்சினையைத் தோற்றிவித்தவர்கள் அனைவரும் இருப்பது இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆகும். இப்போது பார்த்தீர்களா ஹலால் பற்றிப் பேசுகின்றார்களா?  இவற்றுக் கெல்லாம் திட்டம் தீட்டி இருந்தார்கள். முஸ்லிம்களுடைய 20 விகிதமான வாக்குகளை உடைத்தெடுத்தால் வெற்றிபெறலாம் என திட்டமிட்டு செயற்பட்டார்கள்.


காத்தான்குடி, ஏறாவூர், வடக்கு வெளியேற்றம் எ;ல்லாவற்றையும் மறந்து 2015 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மஹிந்த எதிராக வாக்களித்தார்கள். தர்கா டவுன் பிரச்சினை கூட இவ்வாறு உருவாக்கப்பட்டதுதான். 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம் ஏற்பட்டதும் ஐக்கிய தேசிய கட்சி காலத்தில் தான். எமது நாட்டு தமிழ் மக்களும் இந்த நாட்டுப் பிரஜைகளே.


இந்த இனத்துக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் நாங்களா? உலக நாட்டிலுள்ள செல்வாக்கைப் பெற்றவர்கள் என்று கூறுகின்றார்கள். இவர்கள் உலக நாட்டின் செல்வாக்கை இழக்கச் செய்பவர்கள் இந்த ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் தான். ஸ்ரீமாவோ பண்டார நாயக்க காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மிகவும் நட்புறவு வலுப்பெற்று இருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


இதில் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார், அஸ்ஹர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

இக்பால் அலி

ஊடக இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்ற கெஹலிய ரம்புக்கல, முஸ்லிம்களிடம் ஆற்றிய தெளிவுபடுத்தல் உரை. ஊடக இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்ற கெஹலிய ரம்புக்கல, முஸ்லிம்களிடம் ஆற்றிய தெளிவுபடுத்தல் உரை. Reviewed by Madawala News on November 05, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.