சபாநாயகர் அருதிப்பெரும்பான்மையை கோரலாமா.?


ஒரு பிரதமராக நியமிக்கப்படுகின்றவர் அறுதிப் பெரும்பாண்மை உள்ளவராக
இருக்கவேண்டும் என்பது 19வது திருத்தத்தின் ஊடாக வந்த சட்டமல்ல, மாறாக ஏற்கனவே உள்ள வழமையான சட்டம்தான் என்கின்றபோது.

2015 ஜனவரி 08ம் திகதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்ரி பாராளுமன்றத்தில் பெரும்பாண்மையே இல்லாத வெரும் 47 பாராளுமன்ற உறுப்பினர்களையே வைத்திருந்த ரணிலுக்கு பிரதமர் பதவியை கொடுத்தார். இந்த நேரம் சபாநாயகராக இருந்த சமல் ராஜபக்ச பெரும்பாண்மையை நிரூபியுங்கள் என்று ரணிலிடம் கோரிக்கை வைக்கவில்லை. அவர்கள் பொதுத்தேர்தல் நடக்கும்வரை பிரதமராக இருந்தார்.

அந்த நேரம் இதனை ஜனநாயக படுகொலை என்று யாரும் கூறவில்லை என்கின்றபோது, இப்போது மட்டும் ஜனநாயக படுகொலை நடந்துள்ளதாக கூக்குரல் இடுவது ஏன்

இன்று ரணிலின் ஆட்சி மேற்குலகங்களுக்கும், டயஸ்போராக்களுக்கும், டயஸ்போராக்களின் தயவிலே காலத்தை ஓட்டும் தமிழ் தலைவர்களுக்கும்தான் தேவைபடுகிறது என்கின்றபோது, நாட்டை நேசிக்கும் சிங்கள மக்களின் நிலைப்பாடு எப்படி அமையும் என்பதை யாரும் கூறித்தான் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது எனலாம்.

புலிகளை அடக்கியபோது இந்த மேற்குலகமும், டயஸ்போராக்களும் என்ன பாட்டைபட்டார்கள் என்பது உலகமே அறியும், இப்படிப்பட்டவர்களுக்கு அஞ்சாமல் நாட்டை யுத்த பீதியற்ற நாடாக ஆக்கித்தந்த மஹிந்தவின் மீது இவர்கள் இன்றும் எதிர்ப்புக் காட்டுவதற்கு இதுவே காரணமாகும்.

புரிந்தால் சரிதான்....

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
சபாநாயகர் அருதிப்பெரும்பான்மையை கோரலாமா.? சபாநாயகர் அருதிப்பெரும்பான்மையை கோரலாமா.? Reviewed by Madawala News on November 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.