வடக்கு கிழக்குக்கு தனி பராளுமன்றம் கோரலாம் ; மனோ..



பாராளுமன்றத்துக்குள் இன்று அரச பயங்கரவாதம் உருவாகியுள் ளது.
அது அவ்வாறே தொடர்ந்தால் அந்த பயங்கரவாதம் தம் மீதும் செல்வாக்கு செலுத்தும் என தமிழ் மக்கள் அச்சமடையலாம்

அதனால் பிரிவினைவாதமோ, ஆயுத போராட்டமோ ஏற்படுமாயின் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்ஷவும் மாத்திரமே பொறுப்புக் கூற வேண்டும் என
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடந்த களேபரத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறினார்.

தென்னிலங்கை சிங்கள அரசியல் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கட்சிகளிடையே ஐக்கியம் இல்லைநல்லிணக்கம் இல்லை. ஒற்றுமை இல்லை.இதனை நாம் மிகத்
தெளிவாக கண்டிருக்கின்றோம். பாராளுமன்றத்தில் இதன் தன்மைகள்நேற்று வெள்ளிகிழமையும் பாரா வெளிப்படுத்தப்பட்டன. இதனை நாம் மட்டுமல்லாது எல்லோருமே
பார்க்கக்கூடியதாக இருந்தது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக 'அமர்த்தினோம்

உண்மை யான நல்லிணக்கம், ஒற்றுமையை ஸ்தாபிப்பது, யுத்தம் ஏற்பட்டமைக்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தியே மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தோம்.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பயணம் கனமான காட்சிகளைப் பார்க்கும் இன்று எங்கு உள்ளது, இலங்கை பாராளுமன்றத்துக்குள்ளே சிங்கள கட்சிகளாலேயே ஒற்றுமையாக இருக்க முடியாதெனில் நாம் எவ்வாறு அவர்களோடு நல்ல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பேணமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறான எண்ணங்கள் மேலெழும் போது, எமக்காக தனியான பாராளுமன்றம் ஒன்றினை
உருவாக்க வேண்டும் என வடக்கு,
கிழக்கு மக்கள், புலம்பெயர் மக்கள்
பிரயத்தனங்களை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்குக்கு தனி பராளுமன்றம் கோரலாம் ; மனோ.. வடக்கு கிழக்குக்கு தனி பராளுமன்றம் கோரலாம் ; மனோ.. Reviewed by Madawala News on November 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.