பெரும்பான்மை ஆதரவுள்ள ஒருவரை பிரதமராக நியமிப்பது ஜனாதிபதியின் கடமை..



பெரும்பான்மை ஆதரவுள்ள ஒருவரை பிரதமராக நியமிப்பது ஜனாதிபதியின் கடமை என பாரளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.


இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.


மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,


பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத ஒரு அணி எவ்வாறு அரசாங்கம் அமைக்க முடியும். இன்று அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெளிவானது.  மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நீடிக்க முடியாது. அரசாங்கமும் தொடர்ந்து நீடிக்க முடியாது. ஜனாதிபதி அவர்கள் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து பெரும்பான்மை ஆதரவுள்ள ஒருவரை பிரதமராக நியமிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


பெரும்பான்மை ஆதரவுள்ள ஒருவரை பிரதமராக நியமிப்பது ஜனாதிபதியின் கடமை.. பெரும்பான்மை ஆதரவுள்ள ஒருவரை பிரதமராக நியமிப்பது ஜனாதிபதியின் கடமை.. Reviewed by Madawala News on November 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.